இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 28, 2010

அன்பைத்தேடும் அனாதையாய்...

என்னருமை தந்தையே 
எப்போழுதும் உன் மொழியில் - மகளே என 
என் காதினை குளிர்த்தாலும் 
என் ஏக்கம் உன்னருகாமைக்கு 

அன்பைத்தேடும் அனாதையாய் 
அரவணைப்பற்ற மழலையாய் 
அலைகிறேன் அப்பா 
அன்னை மறுத்த தந்தை சுகத்திற்காய்


தந்தை விரல் பிடித்து நடக்கும் 
தலைநிமிர்ந்த சகாக்களின் 
தற்பெருமை மொழிகளுக்கு 
தடுமாறுகிறேன் விடையளிக்க 

ஏங்கச்செய்த பிரிவில் 
ஏக்கங்கொண்ட துயர்கள் 
ஏன் எமை மட்டும் 
ஏங்கிடச்செய்கிறது 

காத்திருந்து கடந்துவிட்ட 
காத்திரமான மழலைமொழிகள் 
காலத்தால் அழிந்துவிட 
காரணமின்றி தொலைத்திருக்கிறோம் 

திரும்பிடா மழலைப்பருவத்தில் 
திண்டாடிய பாசத்தின் 
திகில் தீர்திட வேனும் 
திரும்பிடுமா இப்பருவத்தில்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

கவி அழகன் said...

குழந்தையின் பிரிவு ஏக்கம் அப்படியே பிரதிபலிக்கிறது
எவ்வளவு காசு உழைச்சாலும் அத பிழைகளுக்கு பக்கத்தில இருந்து அனுபவிக்கணும்
எல்லாருக்கும் இது சாத்தியப்படுவதில்லை

சசிகுமார் said...

விவாகரத்து செய்யும் தம்பதிகளின் குழந்தைகளின் நிலைமை இது.

சிந்தையின் சிதறல்கள் said...

@யாதவன்

உண்மை நண்பா எத்தனை உள்ளங்கள் இதனை அனுபவிக்கின்றன என்பது அத்தனைபேரும் அறிந்ததே இது துயரான நிலை அதைக்கருவாக்கினேன்

சிந்தையின் சிதறல்கள் said...

@சசிகுமார்
உண்மை நண்பா தந்தையரைப்பிரியும் அத்தனை குழந்தைகளின் உணர்விது

ஹேமா said...

நெகிழ்வான வரிகள் கலங்க வைக்கிறது.

உங்கள் தளத்தில் பின்னூட்டம் போடத் திறந்தால் ஒரே நேர்கோட்டில் கவிதை வரிகள் வருகிறதே...ஏன் ?

சிந்தையின் சிதறல்கள் said...

@ஹேமா

உங்களின் வரிகளின் அர்த்தம் புரியவில்லை

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...