ஆணென்று நீமறந்து பெண்ணானவளை
வெளிநாட்டு வேலைக்கனுப்விட்டு
அவளனுப்பும் பணத்தில் வாகனமும்
உம்சுகத்திற்காய் பெண்ணும்தேடுகிறாய்
உம் பகட்டு வலம்வருகையில் மயங்கி
மதியிழந்த குமரிப்பெண்ணானவளும்
நீதான் அவள்வாழ்கையென்று
ஏமாந்த இன்னோர் பெண்
விளக்கிக்கூறியும் புரிந்திடாத
மகளைப்பெற்ற பெற்றோரும்
மனமுடைந்து நொந்தழுது
காலத்தை வைகிறார்கள்
உன் காதலை நெஞ்சில் சுமந்து
அயல்நாட்டுத்தனிமையில்
முதலாளிகளின் தொல்லைகள் தாங்கி
தானடைந்த விதிநினைத்து அழுகிறாளுன்துணை
முப்பரிமாணக் குற்றத்தின்
மன்னனாய் மகிழ்வுற்று
உம்மவர்களின் கண்ணீரில்
சல்லாப வாழ்வு உனதாகிறதே...
நீகாணும் சுகம்யாவும்
நிலைத்திடாத அற்பமென்று
உணரும்வரை காத்திராது
உணர்ந்துன்வழி மாற்றுவீரா??
3 comments:
சமூகத்திற்கு தேவையான கருத்து...
அதை கவிதையில் புகுத்திய விதமும் அருமை..
வாழ்த்துக்கள்..
திரையிடப்பட்டிருக்கும் பலரின் வலி இந்தக் கவிதையில் கசிகிறது . பகிர்ந்தமைக்கு நன்றி
உண்மையில் பலரின் வலி..அருமை
Post a Comment