அன்பார்ந்த சகோதர சகோதரிகளே....
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனும் அவனுடைய தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த திருமணம் இன்று ஒரு வியாபாரமாக உருவெடுத்து எம் சமுகத்திற்கு மத்தியில் பெரும் சவாலாக மாறியிருப்பதைக் காணும் போது மனம் பெரும் வேதனை அடைகிறது.அதுபற்றி உங்களை நோக்கி சிறு அன்புக்கட்டளையை முன்வைக்க நான் எடுத்துக்கொண்ட இம் முயற்சி உங்களையும் உங்களின் மனதளவிலும் சிறு மாற்றங்களை ஏற்படுத்துமென நம்புகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்
இறைவனும் அவனுடைய தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித்தந்த திருமணம் இன்று ஒரு வியாபாரமாக உருவெடுத்து எம் சமுகத்திற்கு மத்தியில் பெரும் சவாலாக மாறியிருப்பதைக் காணும் போது மனம் பெரும் வேதனை அடைகிறது.அதுபற்றி உங்களை நோக்கி சிறு அன்புக்கட்டளையை முன்வைக்க நான் எடுத்துக்கொண்ட இம் முயற்சி உங்களையும் உங்களின் மனதளவிலும் சிறு மாற்றங்களை ஏற்படுத்துமென நம்புகிறேன்
இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டிய வாழ்க்கை நெறியை முற்றாக மறந்தும் மறைத்தும் மூதாயர்கள் பின்பற்றிய வழியில் சீதனம் கொடுத்தால் திருமணம் செய்கிறேன் என்ற மனப்போக்கும் அசிங்கமான வளக்கமும் பின்பற்றப்பட்டு வருகிறது. மாஷா அல்லாஹ் இன்றய எம் சில இளைஞர்கள் இந்த முறையை மாற்றி இஸ்லாம் கற்றுத்தரும் அழகிய திருமணங்களை தங்களாலான வசதிக்கு ஏற்ப நிறைவு செய்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து நிகழ்கால எதிர்கால எம் சமுகத்தை வளப்படுத்தினோமானால் நாளை எமக்காக காத்திருக்கும் உயரிய சுவனத்தினை அனைவரும் அடைந்திடலாம்
இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்னும் கேள்வி எமக்குள் எழுகிறது எமது வாழ்வை எமது மார்க்கம் கற்றுத்தந்த முறையில் அமைத்துக்கொண்டாலே போதமானது எம் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே அதற்கான பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும் மனதளவிலும் செயலளவிலும் அதிகமதிகமாக இஸ்லாத்தின் பால் வழிநாட்த்துங்கள் என் பெண் குழந்தைக்கு சீதனம் கொடுப்பதில்லை எனவும் ஆண் குழந்தைக்கு சீதனம் வாங்குவதில்லை எனவும் உங்களுக்குள் நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள். அத்தோடு சோம்பேறிகளாக இருந்துவிடாமல் பெண்களை மார்க்க கல்வியின் பால் ஆசையை ஏற்படுத்தி அதன் வழிகாட்டலை பின்பற்றச்செய்யுங்கள் ஒவ்வொரு ஆண் குழந்தையையும் அவனாக உழைத்து அவனுக்கான தேவைகளை நிறைவு செய்ய வழியமைத்துக்கொடுங்கள் இவை இரண்டும் சரிவர நிறைவு செய்யப்டுமானால் எம் சமுகத்தின் சமநிலை உறுதிப்படுத்தப்படும்.
இன்றைய இளைஞர்கள் செயல்பட வேண்டிய தேவை மறந்து மனஇச்சைக்கு அடிபணிந்து வாழ்கிறீர்கள் நாளைய சமுதாயம் உங்களின் கைகளில் அமானிதங்களாக தரப்பட்டிருக்கிறது நேற்றய இளைஞர்களான எம் பெற்றோரின் குற்றம் எம் தலைகளில் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் இறைவனுக்காக உங்களை நீங்கள் தயார் செய்யுங்கள் சீதனச் சந்தையில் தலைகுனிந்து நிற்காதீர்கள் உங்களின் பெற்றோர் உங்களை விலைபேசினால் அதற்கு தலைசாய்த்திடாதீர்கள் ஹறாமான செல்வத்தில் உருவாகின்ற உங்களது வாழ்க்கை நாளை நரகத்திற்கு அழைத்துச்செல்லும். தைரியமாக இதற்கெதிராக பேசக்கூடிய அளவு நீங்கள் உங்களைத் தயார் செய்யுங்கள் தயவு செய்து இது பற்றி சிந்தியுங்கள்.
எம் சமுகத் தலைவர்களே நீங்களும் இதற்கு கடமைப்பட்டிருக்கிறீர்கள். சீதனம் கொடுக்கல் வாங்கல்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.
சீதனத்தில் நடாத்துகின்ற திருமணங்களை முன்னின்று நடத்தாதீர்கள்.
ஊரின் முக்கிய பொறுப்புகள் மற்றும் பள்ளி நிருவாக சபைகள் போன்றவற்றில் இருக்கின்ற நீங்கள் இந்த சீதனத்துக்கெதிரான கோசங்களை ஆரம்பியுங்கள். நீங்கள் வாங்கியிருந்தால் திரும்பக்கொடுத்துவிடுங்கள். அதை விட்டும் ஒதுங்கிவிடுங்கள் மிக முக்கியமாக எம் சமுகத்தில் இருக்கின்ற ஆலிம்கள் உங்களை சரிசெய்யுங்கள் அனைவரும் உங்களை காரணம் காட்டி தப்பிக்க முனைகிறார்கள் நீங்கள் வழிகாட்டிகள் அதிகமதிகம் இதுபற்றி எமது ஜும்மாக்களில் பிரசங்கம் செய்யுங்கள் உங்களது சகாக்களை சீதனத்திலிருந்தும் வீடுவித்து நீங்களும் அதிலிருந்து நீங்கி சமுகத்திற்கு உதாரண கர்த்தாவாக இருங்கள். எம் ஊரைப்போன்ற சிற்றூர்களில் இவற்றை உங்களால் நடைமுறைப்படுத்தத் தடுக்கின்ற காரணிகள் எதுவென்று ஆராய்ந்து துடைத்தெறிங்கள்
அனைத்து தரப்பினையும் தாண்டி எம் சமுகத்தின் பெண்களே உங்களிடமே இதனை ஒப்படைக்கிறேன். சீதனம் வாங்காது உங்களை மகர்கொடுத்து திருமணம் செய்கின்ற ஆண் வரும் வரை காத்திருங்கள். இறைவனுக்கா உங்களை அர்ப்பணியுங்கள். உங்களது மனங்களைக் கட்டுப்படுத்துங்கள் காதல் கழியாட்டங்களுக்குள் சிக்குண்டு உங்களது வாழ்வை சீரழித்திடாதீர்கள் இறைவன் அனைவரையும் சோடிகளாக படைத்திருப்பதாக வாக்குறிதி அழிக்கிறான். கவலை மறந்து கட்டுக்கோப்பான வாழ்வுடன் காத்திருங்கள். உங்களுக்கான உங்கள் துணை கண்ணியத்துடன் தேடிவருவார். அவருக்காக வாழ்ந்து இருவருமாக உயரிய சுவனம் அடைந்திடுங்கள் சீதனம் கொடுத்து ஆண்களை தீங்கு செய்ய நீங்கள் துணைபோகாதீர்கள் நாளைய இறைவனின் பிடி மிகப்பயங்கரமானது பயந்து கொள்ளுங்கள்.
எம் சமுகத்து அனைத்து தரப்பினரும் இதுபற்றி சிந்தித்து எடுத்து நடப்போமானால் நாளைய எம் சமுதாயத்தை நாம் எதிர்பார்க்கின்ற அடைவினை நோக்கி நகர்த்திட நிச்சயமாக முடியும். இறுதியாக எம் பெற்றோர்களிடம் வினயமாக நான் வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் உங்கள் குழந்தைகளுக்கான சொத்துப்பங்கீட்டில் குறை வைக்காதீர்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள் அனேகமாக பெண்களுக்கே ஆண்களின் சொத்துக்களையும் பகுந்து அளிக்கிறீர்கள் இதுவே இந்த சீதனக்கொடுமைக்கு இட்டுச்செல்கிறது இதில் எமது இஸ்லாம் கற்றுத்தரும் பங்கீட்டு விகிதத்தினை பின்பற்றுங்கள் ஆண்களுக்கான இரு பகுதியை கொடுத்தீர்களானால் அதில் அவனால் அவனுக்கு தேவையான வாழ்வை அவன் தயார்செய்து கொள்வான். அவ்வாறு நடந்தேறாத காரணத்தினால் சொத்துக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் எம் வாலிபர்கள் அவர்களது வாழ்வையே தொலைத்து அதிலிருந்து மீண்டிட முடியாத அளவு இன்னல்களுக்குள்ளாகித் தவிக்கிறார்கள். உங்களது கடமையில் நீங்கள் தவறிழைத்திடாதீர்கள் இறைவன் எம் அனைவரையும் நேர்வழிப்படுத்திட போதுமானவன். நன்றி
0 comments:
Post a Comment