நானெழுதிய முதல் கவிதை தாய்ப்பாசம்
நானேங்குகின்ற உணர்வும் தாய்ப்பாசம்
எனக்காக மறுக்கப்படுகிறது தாய்பாசம்
என்னளவில் வேசமாய் இருக்கிறது தாய்பாசம்
தரணியில் பிறந்த தங்கங்களெல்லாம்
தயவின்றிப் பெறுகிறார்கள் தாய்ப்பாசம்
துரதிஷ்டமாய் நான் பிறந்து
தவித்துப் பெறுகிறேன் தாய்ப்பாசம்
தயென்ற உத்தம உறவின் தற்பெருமையாய்
மரணம் வரை தொடர்கிறது தாய்ப்பாசம்
இவ் உலகத்து நிகழ்வில் - அற்ப சுகங்கள்
அரண்மணை ஆனாலும் குறைத்திடுமா தாய்ப்பாசம்
அன்று அம்மா அம்மாவென்று அழுதபோது
அரவணைத்து ஆறுதலாக்கியது உன் தாய்ப்பாசம்
இன்று எத்தனை அம்மாவென்றழைத்தும்
சத்தமின்றிச் செல்கிறாயே எங்கே உன் தாய்ப்பாசம்
எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
பாசங்களுக்கெல்லாம் அதிபதியாயம் தாயின்
பாசத்திற்காய் ஏங்கச்செய்கிறது தாய்ப்பாசம்
நேசமது தாயிடமிருந்தடைந்து - என்
கவசமது பாசத்தை அளிக்குமா தாய்ப்பாசம்
குறிப்பு : தாயிருந்தும் அவளது பாசத்திற்காய் ஏங்கும் ஒரு அபலையின் கருவிது.
0 comments:
Post a Comment