மழலை உன் சொற்களில்
மயங்குகின்றேன் கண்ணே... என்
மனதிற்குச் சுமையாய்
கனக்கிறது உன்வார்தைகள்
விளையாட்டுக் காட்டிவிட்டு
விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு
என் தடங்களைத் தடவிப்பார்த்து
தந்தை முகம் தேடுகிறாயென்று உன்
தாய் மொழியில் கேட்டு நான் தவிக்கின்றேன்
இத்தரணியில் நாம் பெற்றவரம் இதுதானோ.....
கடந்த பெருநாட்களைக் கடிந்து
என் வரவில் பெருநாள்க் காணக்
காத்திருக்கும் செல்லமே...
என் நிலைகொண்டு நொந்தழுகிறேன்
மரணம் எமை பிரித்திருந்தால்
மறந்திடுவாய் ஒரிரு நாட்களுக்குள்
தினம் தினம் மரணமிப் பிரிவால்
மகிழ்வின்றித் தவிக்கிறாய்....
எமைப்படைத்த இறைவனிடம் மாத்திரம்
இருகரமேந்தி நில் எம் போன்ற துயர்
இனியாருக்கும் கொடுத்திடாதே என்று
வல்லநாயன் வழிசெய்யட்டுமெம் வாழ்வுக்கு.....
குறிப்பு : என்னைப் போன்று குழந்தைகளைப் பிரிந்து தவிக்கின்ற அத்தனை தந்தையினருக்கும் இக்கவிதையினை சமர்ப்பிக்கிறேன்.....
0 comments:
Post a Comment