துரோக அரங்கேற்றத்தினை
துச்சமாய்த் துணிந்து செய்து
துணைவனின் துறவுக்கு
தூண்டியதுன் காமம்
வேண்டியது வேண்டுமென்று
நீ வேண்டாத போதும் - ஒரு
ஆண்மகனாய் உனக்காக
ஆசைகளுக்கு விலங்கிட்டு
அடிமையாகினான் அவலங்களுக்கு
ஏழ்மையாய் அவன் பிறந்து
ஏளன வாழ்வை ஏற்க மறுத்து
நாட்டாரின் வழமைகளுடன்
நாடு கடத்தப்பட்டானே - அவனது
குற்றமா நீ செய்யும் துரோகம்
ஒவ்வொரு நொடியும்
உணர்வுகளை இறுக்கி வைத்து
சோகங்களின் சுமைகளை
உமது சுகத்திற்காகச் சுமக்கிறானே
எப்படி நீ குற்றம் சுமத்துகிறாய்
ஆசையாய் உனைக்காண
அன்புச் சுமைகளோடு வந்தவனுக்கு
அடிவயிற்றுச் சுமையில்
அன்னியனின் அசிங்கத்தினை
இவன் தலையில் இடியாய் இறக்கின்றாயே....
என்ன இது அனியாயம்
பெண்ணினத்துக்கே அவமானமுன்னால்
அப்பாவி அவன் செய்யாத குற்றத்தில்
ஆயுட்காலத் தண்டனையுன்னால்
ஏற்றிருப்பதுவும் தகுமோ.......
இச்சைக்கு இசைந்து
இன்னல்களை விலைக்கு வாங்கி
இடிபாடுகளுடனான வாழ்வை விட
இறைவனுக்கு அஞ்சி இனிய நல்லறத்துடன்
இன்புற வாழ்ந்திட வேண்டாமா.....????
சிந்திப்பீராக.......................................................!!!!
நான் கண்ட ஒரு அனியாயம் என் மனதைத் தைத்த வண்ணமிருந்தது கட்டியவளின் துரோகம் கணவனுக்காகியதால் கைவிட்டு விட்டு மரணத்தினை தேடிக்கொண்டான் துரோகமிளைத்தவளுக்கு தண்டனை எதுவுமற்று உலவுகிறாள் இவ்வுலகில் மறுமையில் இறைவனின் பிடியிலிருந்து தப்பிவிட முடியாது என்பதை மறந்தவளாக...... காலம் பதில் தரும்
2 comments:
வணக்கம்
உண்மையான வரிகள்.. இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய சமூக அவலம் வரிகளில் வலிகளாய்!
இவ்வரிகளை காணும் போது நம் சமூகம் எங்கே போய் கொண்டிருக்கின்றது என கேட்க தோன்றுகின்றது.
கவிதை வரிகள் சமுதாய நோக்கில் இருக்கின்றது ஹாசிம். .. உங்களுக்கு தொடர் பதிவு அழைப்பு இருக்கின்றது ஹாசிம். முடிந்தால் தொடருங்கள்.
Post a Comment