வேதனை தரும் இரவுகள்
என்னை சிறைவைத்திருக்கிறது
சோதனைக் காலமாய் என் வாழ்வு
சுகமான தூக்கம் தேடி அலைகிறது
பதமான பஞ்சணை மெத்தையுண்டு
இதமான தென்றலின் துணையுமுண்டு
தூக்கம் மட்டும் தூர நிற்கிறது தொடரும்
துக்கம் மட்டும் துணை வருகிறது
நித்திரை செய் மனமே என்று
நிந்தித்து நிலை தடுமாறுகிறேன்
மந்திரித்து மாத்திரை தர
மாது அவளும் மறுத்துவிடுகிறாள்
போதை தரும் பேதையானவள்
வேதனை தரும் வலிகளானாள்
உறக்கம் மட்டும் அவளாலின்றி
உலரந்து கிடக்கிறதென் வாழ்வு
என் வாழ்வை ஆக்கிரமித்திருக்கும்
நித்திரையும் அவளும் ஒன்றுதான்
அவளின்றி உள்ளம் தடுமாறி
நித்திரையின் வாயிலாக நிந்திக்கிறாள்
0 comments:
Post a Comment