உன் பௌர்ணமி முகங்கண்டு
என் மணாளனின் சுகங்கொண்டேன்
திகட்டாத தித்திப்பில் திளைத்திருந்து
தினந்தினம் இன்ப மழை கண்டிருந்தோம்
உன் ஒளி விழாவில்
என் மடி தலைவைத்துக் குழைந்து
அவனளித்த ஸ்பரிசத்தில்
மெய்மறந்த தருணமிருந்தது
அவன் விரல்கோதித் தலைநீவி
என் வட்டமுகம் சொட்டச்சொட்ட
முத்தச் சுகங்களை முழுதாய்க்காண
உடனிருந்த நிலாவே - இன்று
தனிமையில் அல்லவா அழுகிறேன்
பிரிவின் துயர் தந்து -
பிணியின் துணைதந்து
சென்றுவிட்டான் வெகுதூரம்
அவனின்றிய உன்னால்
எனக்கேது சுகமுண்டு நிலாவே....
நீ சென்றாவது சொல்
என் நிலையின் அவலத்தை
என் தலைவனோடு வா
சேர்ந்து நாம் மகிழ்ந்திடலாம்
0 comments:
Post a Comment