இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 15, 2012

நாளை நமக்காய் உதயமாகட்டும்

பேரினவாதம் பாடியோரும்
வால்பிடித்து வாதங்கள் சேய்தோரும்
உன் எழுச்சிகண்டு வீழ்ந்தனர்
இன்று உன் காலடியில்

வேண்டாம் என்றோருக்கு
வேண்டியதுன் தயவென்று
ஆக்கிவிட்ட இறைவனுக்கே
புகளனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்

ஒற்றுமை எங்கள் பலமென்று
மீண்டும் நிரூபித்த மக்களுக்கே வெற்றியின்று
அற்புதமாய் வெல்லயிருந்ததை
அறியாதோர் சிலரெமது வாக்குகளால்
வெற்றிகண்டு தோற்றோருக்கு
அனுதாபங்கள் ஆறுதலாகட்டும்

Monday, September 3, 2012

காலம் பொன்னானது இன்றே செயல்படுவோம்......

அன்புச் சகோதரர்களே........


அரசியல் அட்டகாசங்கள் அங்குமிங்கும் அலை மோதுகின்றது யாரோ ஒருவரின் இருப்பிற்காய் சகோதரனை சகோதரியை வெட்டி வீழ்த்தும் அனாகரீக அரசியல் அத்துமீறல்களாய் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமிருக்கிறது. தேர்தல் காலம் வந்தால் தோழில் கைபோட்டிருந்த உற்ற தோழனையும் எட்டிநின்று பார்த்து ஏழனம் செய்யும் அரசியல் காலமாக மாறியிருக்கிறதை காண்கிறோம். அரசியல் மேடைகள் அசிங்கமான வார்தைகளாலும் வசைகளாலும் கேட்பதற்கு அருவருப்பினைத் தருகிறது. அத்தனையும் ஒரே சமுகம் ஒரே மதம் ஒரே இறைவனை ஒரே நபியை பின்பற்றுகின்ற உத்தம சமுகத்தினை சின்னாபின்னமாக்குகின்ற ஓர் ஆயுதமாய் இன்று அரசியல் மாறியிருப்பதுதான் கவலைக்கிடமானதாக இருக்கின்றது. என் சகோதரனுக்கு நான் கை ஓங்குகின்றேன் என்று ஏன் சிந்திக்க முடியவில்லை அப்படி என்னதான் எமது கண்களை மறைத்திருக்கிறது.....



மாற்றுச் சமுகத்தின் அரசியலை ஏன் உங்களால் உற்றுப்பார்க்க முடியவில்லை அவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் அவர்களின் நோக்கம் எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும் உழைப்பதற்கு வேலை வேண்டும் எங்களுக்கு உயர்பதவிகள் வேண்டும் என்று யாரும் கருதவில்லை அவர்களது சமுகத்தின் நிலையினை ஒன்றுபட்டு உலகுக்கு உணர்த்திடக் காத்திருக்கிறார்கள் நிச்சயமாக பேரின அரசியலோடு ஒட்டியிருக்கின்ற சில ஒட்டுண்ணிகளுக்கும் பாடம் இந்த தேர்தலில் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதை ஊர்ந்து ஆராயும் போது காணக்கூடியதாக இருக்கிறது அவர்களுக்கான ஆசனங்களை அவர்கள் இன்றே தீர்மானித்துக்கொண்டார்கள் காட்டிக்கொடுத்தோரும் கூட்டிக்கொடுத்தோரும் இந்த தேர்தலோடு வீடுகளிலும் வெளிநாடுகளிலும் குடியேறுவார்கள்.......


Thursday, August 16, 2012

(வாக்கெனும்) அரிவாளைத் தீட்டிக்கொள்....


தற்பெருமை அரசியலும்
தாளாத துயரங்களுடன் 
அடாவெடித்தன தலைவர்களும்
அவதியுறும் அப்பாவிகளுமாய்
அரங்கேற்றப்படுகின்ற அவலங்களை
கூத்தாடிகளங்கு அகத்தினுள் மகிழ்கின்றனர்

அண்ணன் தம்பியாய்
ஓர்தாய் பிள்ளைகள்போல்
ஒற்றுமை அரசியலை
உலகுக்கறிவித்த சமுகம்
இன்று சின்னாபின்னமாய்
சிதறிச் சீரழிகிறது சிரிக்கிறார்களங்கு

மதத்தால் ஒரு கொடியின் கீழிருந்தும்
மனங்களால் உருவான பாகுபாட்டில்
மானங்களை கூறுபோட்டு
வியாபாரம் செய்கின்றனர்
இலாபத்திற்காய் காத்திருக்கின்றனர்
முதலீடு செய்த முதலாழிகளங்கு

Friday, August 10, 2012

காதலின் வெகுமானம் சந்தேகமா??


உன்னால் உனை உணராத போது 
உலகே உமக்கு இருளாயிருக்கும் 
வெகுநாளாகி வேரூன்றிய வாழ்விலும் 
வெதனைதரும் சந்தேகங்களெதற்கு 

மனதிற்கிட்ட கண்ணாடியால் 
காண்பதெல்லாம் காரிருளாகி 
கண்ணியமான வாழ்வையும் 
காவுகொள்ளச் செய்வததெற்கு 

சந்தேகிக்கத் துணிந்த உமக்கு 
எதையும் சரிகாணத்தெரிவதில்லை 
சரிகாணத்தெரிந்திருந்தால் 
சந்தேகமே குறிக்கிடாது 

Sunday, July 8, 2012

(காதல்)எதிரிக்குத் தூக்குமேடை....!!



உலகக் காதலர்களின்
உரிமையான கூக்குரல்
ஒலித்திருக்கிறது ஓரிடத்தில்
காதலை எதிர்ப்போருக்கு
தூக்குமேடை காத்திருக்கிறதாம் 


காதல் ஒரு பாவமென்றும்
காதலர்கள் பாவியென்றும்
காலாகாலம் எழுப்பிய ஒலிகளுக்கு
சாவுமணி அடிக்கிறார்களாம் 


தன்மனம் ஏற்றவனை/(ளை)
தன்நிலை சரிகண்டு 
காதலித்துக் கரம்பிடிக்க 
எத்தனை காலம் தான் போராடுவது 

Monday, July 2, 2012

அடைந்திடா ஓட்டமெதற்கு....?





ஒடுகிறாய் ஓடுகிறாய் 
எதைத்தேடி ஓடுகிறாய் 
உன் வாழ்நாளில் எதுவரை ஓடுவாய் 
நீ பயந்த உன் எதிர்காலம் 
உன்னை துரத்துகிறதென்று 
உன்னால் முடியுமட்டும் ஓடுகிறாயா??

துர்ப்பாக்கிய சாலியாய் 
துயர்களைக் கண்டும் 
துன்பங்களைக் கண்டும் 
துயில் கொள்ள இடம்தேடி ஓடுகிறாயா??

இல்லை நிம்மதி வேண்டுமென்றும் 
நிலையான சுகம் வேண்டுமென்றும் 
வேறுலகில் கிடைப்பதாய் கண்ட 
கனவின் பின்னால் ஓடுகிறாயா??

Sunday, July 1, 2012

உனக்கென உதிர்ந்த வரிகள்


ஒவ்வொரு வருடமும்
ஓயாது உணர்த்திடும்
உன் மலர்வு நாளை
மகிழ்வோடு கடந்திடப்
போராடுகிறது மனம்


ஏக்கம்தான் வாழ்வாவென
எண்ணத்தோன்றுகிறது
ஏனிந்த ஏமாற்றங்களென
எய்த்து நிற்கிறது மனம்


அத்தனை தந்தைக்கும்
அகம் நிறைத்திடும் செல்வம்
அன்னையாய் மலர்ந்திட்ட
அருமை மகளின் நிகள்வல்லவா


தாய், தாரம் கடந்த பாசம்
தங்க மகளின் திகட்டாத நேசம்
தரணியை வென்ற தற்பெருமை
தளரந்திடா வாழ்விற்கு
(இறைவனை) வேண்டுகிறது மனம்





Related Posts Plugin for WordPress, Blogger...