மனம் சோர்ந்த தாயுள்ளம்
பெண்ணை வளர்த்தெடுக்க
பெண்காப்பில் தாயுள்ளம்
பள்ளி சென்ற மகள்
பாதை மாறுமா எனும் தாயுள்ளம்
வேலை சென்ற மகள்
வீடு சேருமா எனும் தாயுள்ளம்
வளர்ந்துவிட்ட பெண்ணுக்கு
துணை தேடும் தாயுள்ளம்
கரை சேர்க்கும் வரை
ஏக்கத்துடன் தாயுள்ளம்
பந்தம் அடைந்த பெண்
சிறப்பாய் வாழுமோ என்ற தாயுள்ளம்
வாழும் பெண்ணுக்கு
குழந்தை கிட்டுமோ என்ற தாயுள்ளம்
அடைந்த கணவன்
நற்குணமுள்ளவனா என்ற தாயுள்ளம்
நன்றாய் வாழ்ந்து விட்டால்
சேர்ந்தே மரிப்பானா என்ற தாயுள்ளம்
அந்தம்முதல் ஆதிவரை
ஆரவார வாழ்கையுடன்
கேள்விகளே வாழ்வாகும்
பெண்மைக்குள் போராட்டம்
அடைவுகளை நோக்காகி
போராடித்துணிந்து
ஜெயிக்கும் பெண்மைக்கு
ஏது விதிவிலக்கு........
2 comments:
தலைப்பும் கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக அழகாக இருக்கிறது... வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி தங்களின் அன்பான வாழ்த்தில் ஆனந்தம்
Post a Comment