என்னை ஈன்ற தாய்போல்
என்னை ஏந்திய தாய்
எச்சமின்றி அவள் மடியில்
என்வாழ்வு முடியுமட்டும்
பல்லினம் வாழ்ந்தாலும்
பகிஸ்கரிக்காத அன்னையவள்
பசுமையுடன் செழித்துவிட்ட
பல வளமும் நிறைந்தவள்
பேதங்களற்ற உறவுகளின்
பேராதரவு நாடுவதற்காய்
பேதலிக்கும் தாயவள்
பேறு கண்டும் திழைக்கிறாள்
திசைகள் பல கொண்டவள்
திடுக்கிடாது சென்றுவர
திகைப்புடன் வழிசெய்து
திருப்த்தியும் கண்டுவிட்டாள்
அடிகள் பல கண்டிருந்தாள்
அங்கலாய்ப்பும் அடைந்திருந்தாள்
அதிகாரம் உடையோரின்
அதிசயத்தால் வெண்றுவிட்டாள்
கடந்தவைகள் மறந்தாள்
கண்ணியமாய் விழித்திருந்து
கட்டுக்கோப்புடன் காத்துவிட
கறைகளற்ற நாட்களை தேடுகிறாள்
மறைந்து விட்ட சேய்களுடன்
மலர்ந்திருக்கும் குழைந்தைகளின்
மகிழ்ச்சிகளை கண்டிடவும்
மலரும் சிசுக்களை நோக்கிடவும்
மாதா என்றழைக்கும்
மாந்தர்களின் நலத்திற்காய்
மாத்திரம் காத்திடுவாள்
மாறுபாடு காட்டாதும் ஜெயித்திடுவாள்
சமுத்திரத்தின் நித்திலமிவளிடம்
சலனமற்ற பாசம் கொண்டு
சங்கமம் ஆகிவிட்டால்
சந்தோசம் கண்டிடடலாம்
இலங்கை என் தாயவள்
இவள் வீட்டில் சேயானேன்
இத்தனைவரிகளையும்
இன்புடன் சமர்ப்பிக்கிறேன்
4 comments:
புலம் பெயர்ந்த எல்லோரினது ஏக்கங்களும் உங்கள் வரிகளில்.வாழ்த்துகள் ஹாசிம்.
நன்றாக இருந்தது நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி ஹேமா மற்றும் சசி தங்களின் வரிகள் ஊக்க மருந்துகளாக
நன்றிகள் பல
நமதான நமக்காக
Post a Comment