எம்மொழியும் கண்டிராத
|
|
செம்மொழியாம் தமிழ்
|
|
இன்னிசைக்கு
இசைபாடும்
|
|
இன்பமயம் இன்பத்தமிழ்
|
|
எழுத்தொலியும் கருத்தொலியும்
|
|
கற்றுத்தரும்
கருந்தமிழ்
|
|
கவிஞர்களின்
வாழ்வுக்கு
|
|
கைகொடுக்கும்
கலைத்தமிழ்
|
|
பாக்களுக்குப்
பாவெடுக்கும்
|
|
பஞ்சாமிர்தம்
பார்த்தமிழ்
|
|
பாமகனைப் பார்போற்ற
|
|
பல்லவியும் பைந்தமிழ்
|
|
மழலையின் தூக்கமும்
|
|
மணாளனின் மாலையும்
|
|
மரண அமங்கலமும் - என
|
|
மஞ்சம் சேர்க்கும்
தமிழ்
|
|
தமிழ்த்தித்திப்பும்
தவிப்பும்
|
|
தரணியில் காணாத
வியப்பும்
|
|
தங்கத்தமிழுக்கு
உண்டான திகைப்பும்
|
|
கண்டதனால் தமிழுக்கு
அமுதென்பர்
|
தீதும் நன்றும்....
6 minutes ago
2 comments:
தமிழுக்கு மகுடம் சூடிய வரிகள் மிக்க அருமை....
தமிழுக்கு பூமாலையும்,புகழ் மாலையும் சூடி அழகுப் பார்த்திருக்கிறீர்கள்.
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment