கயிரறுந்த காற்றாடியாய்
துடுப்பிழந்த படகாய்
இன்னல்களோடென் வழியில்
அந்தரத்து வாழ்வெனக்கு.....
பெற்றமனம் கல்லாகி....
கரம் பற்றியவன் தொல்லையாகி
நன்றியற்ற மானிடங்களால்
நலமின்றித் தவிக்கிறேன்.....
நானீன்ற ஜீவன்
நலமோடு தானிருக்க....
சுகங்களேதும் தேடாது....
சுத்தமாகவே தொடர்ந்தேன்....
விதி செய்தது சதியெனக்கு..
காதலொன்று கனிந்து...
சாதலொன்றை அதனுள்ளாக்கி
வாழ்வொன்று மலருமென்றிருந்தேன்
மகிழ்ந்திடவும் வகை செய்யலியே.....
எட்டப்பர் கூட்டத்தின்
எள்ளி நகையாடல் கண்டு
ஏழை என் வாழ்வுக்கு
ஏமாற்றமே துணைவந்தது.....
ஏமாற்றுச் சூழலில்
அடுக்கடுக்காய் வஞ்சிக்கப்டுகிறேன்
தஞ்சம் என்று நாட
நஞ்சு கூடத் துணைவரவில்லை
நன்றி மறந்தோரின் நானிலமிது
ஏமாற்றுவோரின் சங்கமமிங்கு
ஏப்பம் விடுகிறார்கள் ஒன்று கூடி
ஏழ்மையாய் மட்டும் பிறந்திடாதே.....
0 comments:
Post a Comment