மனசெல்லாம் ஆக்கிரமித்தவளே....
கனக்கிறதென் மனசு
சுமையகற்றும் வார்த்தைகளுக்காய்
ஏங்கி நிற்கிறதென் மனசு.....
முற்றுந் துறந்த முனியாய்
தலை குனிந்து - உன்
வழி நடக்கின்றேன்
பாதிவழியிலேன் தவிக்கவிடுகிறாய்
உன் போன்று ஊமையாகிட
நானுந்தான் முயற்சிக்கிறேன்
உன் நினைவம்புகள் வந்து
என்னுள்ளிருக்கும் - உன்
இதயத்தையல்லவா தைக்கிறது
ஒவ்வொரு நொடியும்
உறக்கம் கலைத்திடும்
உயரிய காதலை விதைத்து
உளம் நிறைந்து வாழ்கிறாயிங்கு
என் தவிப்பினை அறிந்திருந்தும்
உன் தவிப்போடு ஏன் போர்புரிகிறாய்
சமாதானம் சாந்தியோடு
சகலமும் நாமாகிடுவோமே....
தங்கமே இத்தரணியில்
உனையின்றித் துணை வேறேதடி
தனிமைக்கு நீ விடைகொடு
தற்பெருமையோடு வாழ்ந்திடலாம்
நான் கண்ட ஒரு சிலரது வாழ்வோடு ஒட்டியதான ஒரு கவிதையிது
எனைச் சுற்றிய பலரது வாழ்க்கையில் இவ்வாறான போராட்டத்தினைக் கண்டேன்.
அதை வைத்தே கவிதையாக்கினேன் இக் கவிதையின் கருவானது என்னுடையது அல்லாது இன்னாருடையது என்றும் நான் உரிமை கொடுத்திடவும் முனையவில்லை என் கவிதையின் வாசகர்களுக்கு மிக்க நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்
0 comments:
Post a Comment