தொலை பேசிகளின்று
தொல்லை பேசிகளாகிறது
தீயது நாடும் தீயோருக்குள்
திணிக்கப்படுகிறார்களெம் பெண்கள்
அனாமோதய அழைப்பு என்றாரம்பித்து
அதன் பின்னே அணிவகுத்து வசைப்படுத்தி
காமவலை வீசி எம் கண்மணிகளை
வீழ்த்தி விடுகிறார்கள் காமுகர்கள்.
கண்ணியமாயிருந்தோரும்
ஆசைக்கு அடிபணிந்து
அன்னியவனென்று மறந்து
அன்னியோன்யமாகின்றார்கள்
அழைப்பொன்று அழைத்துச் செல்கிறது
அவப்பெயர் தேடி என்பதை மறந்து
பரிதாபமாய் பாதிவழியில் - அனைத்தும்
இழந்து உயிரையும் விடுகின்றனரே.....
சுதந்திரம் அனைத்திலும் தேடி - இன்று
அவதந்திரங்களால் ஒருவரை ஒருவராழ
நீயா நானா சண்டைகள் இடுகிறார்கள்
பகுத்தறிவுள்ள நாம் சிந்தித்து
வகுத்தறிந்து நல்வழி வாழ்ந்திடணும்
இப்படைப்பானது *"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்" என்பதற்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!
*வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை வேறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!
0 comments:
Post a Comment