மறுக்கப்பட்ட அன்பைத்தேடி
வெறுக்கப்பட்ட அருகாமை தேடி
ஏமாற்று வலைகளுக்குள் சிக்குண்டு
உள்ளத்தின் ஏக்கங்களின் வழியில்
அவமானச் சின்னங்களாய் குழந்தைகள்
பணமே வாழ்வென்றலைந்து
பிணங்களாய் வாழ்ந்தென்ன லாபம்
அடக்கியே வளர்க்கிறோமென்று
அசிங்கங்களை அறிந்திடச்செய்யவில்லை
அருவருப்பாய் உருவெடுத்திருக்கிறது
குழந்தையின் தேடலென்ன
குமரியாய் ஆகிவிட்டாளா??
மார்க்கத்தின் போதனைகளென்ன
அதன் வழிகளை பின்பற்றுகிறாளா??
என்றெதையும் நோக்கவில்லை
அறிவிலியாய் வளர்ந்திருக்கிறது
அன்னியனொருவனின் அரவணைப்பிற்குள்
சென்றுவிடத் தூண்டியிருப்பதென்ன
கொன்றுவிடுமளவு பாதகமாய்
அமைந்துவிட்டிருப்பது எதனால்
ஆராய்ந்தெவரும் பார்க்கவில்லை
அசிங்கமென்று அழுகிறோம்
தவறொன்று நடக்கின்ற போதுதான்
தவறிவி்ட்டோம் அனைத்திலுமென
தடுமாறித் தத்தழிக்கிறோமே
வருமுன் காத்திடத்தான்
என்ன வகை செய்திருக்கிறோம்!!
வயதிற்கேற்ற வரயறைகளை
வகுத்தறிவித்து வளர்த்து
அன்பு கலந்த நட்போடு
அன்னியோன்யமாய்க் கலந்து
அரிய செல்வமாய் நோக்கிடுங்கள் - நாளை
விலை மதிப்பற்ற வைரங்காளய் மிளிரும்
குறிப்பு: அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் சாடல் கருவானது அன்னிய ஆடவனின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவன் மாற்று மதத்தவன் என்றும் பாராது அவன் பின்னே சென்று குடும்பத்திற்கும் சமுகத்திற்கும் களங்கத்தினை ஏற்படுத்தி அனைவரையும் தலைகுனிவுக்குள்ளாக்கியிருக்கின்ற அந்த குற்றவாளிகளை யாராலும் மன்னித்துவிட முடியாது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடந்திடாமல் அனைவரும் விளிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள் வைக்கிறேன் ( அந்த குற்றவாளி தற்போது விளக்க மறியலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருபதாக செய்திகள் இவன் இன்னும் பல சம்பவங்களோடு தொடர்பு பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது எது எவ்வாறாகினும் இவர்களை அடையாளங் கண்டு கொள்ளாத எம்மவர்கள் மீதுதான் குற்றமே)
3 comments:
அவசியமான அலசல் இக்கவிதை சம்பந்தமாக உள்ளே சென்று பாருங்கள் http://www.chenaitamilulaa.net/t51017-topic
சொல்ல வந்த கருத்து சரியே. நன்று ஹாசிம்.பால்ய காதல்,பக்குவப்படாத காதல் அது எவரில் வந்தாலும் தவறே! அதில் வேறு பட்ட கருத்தில்லை.
@நிஷா
உண்மைதான் மிக்க நன்றி அக்கா
Post a Comment