சுதந்திரமாய் கற்று
சுகமாய் வெற்றிபெறாது
சுழன்றடித்த சூறாவளியாகி
ஓயும் நாள் நெருங்குகிறது
திறமைக்கு தூண்டுகோலாகாத
திட்டமிடப்படாத கல்வியாகி
கற்றவருக்கும் தெகிட்டுகின்ற
பரிட்சைநாள் நெருங்குகின்றது
தலையில் கொட்டி
தரித்திரமென்று திட்டி - எதிர்மறையாய் வழிநாடாத்தியவர்களிடமிருந்து
விடுவிக்கும்நாள் நெருங்குகிறது
புலமைப் பரிசிலென்ற
சிறையில் பிடித்து
சித்திரவதை ஓயாது தந்த
விடுதலைநாள் நெருங்குகிறது
கடந்தகால புலமையாளர்கள்
கல்லு மண் தூக்குகிறார்கள்
வெறுத்திருப்பார்கள் போல
வெற்றியாளர்கள் என்று
விஞ்ஞான வளர்ச்சியின்
வேகத்திற்கேற்ற வகிபாடுகளுடன்
மாற்றப்பட வேண்டும் இந்த
விற்பனைக் கல்வித்திட்டம்
செல்வங்களைக் கண்டுநான்
கவலையுற்றேன் வென்றுவர
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
ஆரோக்கியத்துடன் எழுதிவர
மனதாற வாழ்த்துகிறேன்
0 comments:
Post a Comment