பச்சிளம் பாலர் நாங்கள்
படித்தறிந்து தேறிவருகிறோம்
நவீன உலகமிதில்
நலன் காணத் துடிக்கிறோம்
தந்தைமுகம் காணவில்லை
தடுமாறுகிறார் அவர் வேலையுடன்
அன்னை மனம் அலைகிறது
அடுக்களையுடனும் அவர்காணும்
சீரியலுடனும்
சகோதரனும் சகோதரியும்
அலைபேசியுடன் சங்கமமாகி
சரிகாணாத தவறுகளுடன்
சீரழிகின்றனர் தினந்தோறும்
வரைவிலக்கணமற்ற அன்பு தேடி
அலைகிறோம் எங்கள் வழியில்
அறிகிறோம் துஷ்பிரயோகங்களுடன்
அலறுகிறார்கள் ஆனபின்புதான்
கடன்தீராத பேறுகளோடு
அரவணைக்கத் தவறினீர்கள்
அன்புகாட்ட மறந்ததினால்
ஆனதினை கண்டீரா?
கபடமற்ற அன்புகாண
ஏக்கமுண்டு எங்களுக்கு
உங்களன்பு எங்களையடைந்தால்
எங்களாட்சி உலகைவெல்லும்
0 comments:
Post a Comment