காம வெறியர்களின்
மற்றுமொரு கழியாட்டத்தில்
ஆசிபா என்னும் உயிர்
சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாகியிருக்கிறது
அரக்கர்களின் உலகில்
அடிக்கடி காம வேட்டை
நடந்தவண்ணமிருக்கிறது
தண்டிக்கப்படாத பிசாசுகள்
வெறிபிடித்தாடுகிறது
மதிக்கப்படாத பெண் குலம்
வதைககளால் மிதிக்கப்படுகிறது
பச்சிளம் குழந்தை அறிந்திடாத
இவ் வெறியர்களை வேரோடழித்திடணும்....
சட்ட ங்களின் தளர்ச்சியில்
பெட்டைகளின் துணிவிது
நாலு பேரை நடு வீதியில்
தூக்கிலிட்டுப்பாருங்கள்
நாடே தூய்மை பெறும்.....
0 comments:
Post a Comment