இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, December 29, 2010

புத்தாண்டே...புதுவரவே.


ஈராயிரத்துப்பத்து வருடங்கள் 
ஒரு நொடியில் கடந்ததுபோல் 
புத்தம் புதியதுவாய் 
மலர்வதோடு மறைகின்றாய் 

உன்னுள் அகப்பட்ட 
உயிர்களின் அலறல்களும் 
சீற்றங்களில் சிதறிய 
மனிதர்களின் ஆசைகளும் 
அங்காங்கே ஒலிக்கிறதே..

Tuesday, December 28, 2010

எதிர்பார்த்திருக்கிறேன் .....

அன்புநிறைந்தவனே எனை
ஆட்சி செய்தவனே உன்
பிரிவைத் தந்து என்றும் உன்
தவிப்பில் தத்தளிக்க விட்டாயே...


நீ வேண்டும் என்னருகில் 
உன்மார்மீது சாய வேண்டும் 
உன்விரல்கள் தலைகோர வேண்டும் 
உன் பாசமுத்தம் என்
நெற்றி தழுவ வேண்டும்

Monday, December 27, 2010

மாமியாரான தாயவள்

மாமியென்ற பந்தமும் 
மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்


கணவனின் தாயவளை 
என்தாய் போன்றவளென்று 
நண்மை செய்துவிடின் 
நலம் காணலாமதிகம் 

Sunday, December 26, 2010

சிறகொடிந்த பறவைகள்


சின்னஞ்சிறுசுகளாய்
சிதறித்திரிந்த சிட்டுகளாய்
கவலைகளறிந்திராத
வேளைகளோடு பயணித்தோம்


தந்தை உழைத்திருக்க
தாயும் அரவணைக்க
சகோதரப் பாசங்களுடன்
சந்தோசமே காலங்கள்

Thursday, December 23, 2010

நீபோதும் இவ்வுலகில்

அன்பே உன் வதனமலர்வில் 
அகிலம் மறக்கின்றேன்
ஆதாரமற்ற வாழ்வில் 
உனையடைந்து மகிழ்கின்றேன்

உன்னாசை தீர்த்திட 
உயிராய் நானிருப்பேன் 
உத்தமனாய் வலம்வந்து 
ஊடலோடு கலந்திடுவேன் 

Wednesday, December 22, 2010

அதிகாரியாயிரு

மனமே இல்லாத அதிகாரியாய்
மனிதனை மேய்த்து 
மனிதன் பிழைக்கிறான் 
உழைப்பைச்சுறண்டி உயர்வடைகிறான் 


ஏய் மனிதா......
இன்றையதினம் உனதானதால் 
ஆட்டிப்படைக்கிறாய் முடியும்வரை
தொழிலாழியானவனும் மனிதனடா

Monday, December 20, 2010

அச்சங்கொண்டு அடங்கிடாதே....


சொல்வதற்கு துணிந்துநில் 
வெல்வதற்கு எழுந்துநில் 
மாற்றானின் செய்கையில் 
அச்சங்கொண்டு அடங்கிடாதே


ஆளப் பிறந்தவனென்று 
ஆட்டிப் படைப்பவனையோ
வாதப் பிறவியென்று
விவாதம் செய்பவனையோ..
அச்சங்கொண்டு அடங்கிடாதே...





Related Posts Plugin for WordPress, Blogger...