மருமகளென்ற சொந்தமும்
காலாகாலம் கைகலப்பில்
திருத்தம் கண்டிரா தொடர்கதையாய்
கணவனின் தாயவளை
என்தாய் போன்றவளென்று
நண்மை செய்துவிடின்
நலம் காணலாமதிகம்
புதிதாய் புகுந்தவீடேறி
புதுமையாய் காண்பவளை
குழந்தை வளர்ப்பதுபோல்
தாயாய் வழிகாட்டி நின்றால்
மகளாய் மாறி ஏந்தமாட்டாளா?
செல்வச் செழுப்பினிலோ
அடங்கிய ஆட்சியினிலோ வளர்ந்த
மாற்றான் முற்றத்து மலரவளை
கசங்கிடாது காத்திடத்தான் மாட்டீரோ...
மாமியாரென்ற தாயவளின்
கருத்தோடொத்திசைந்த மருமகளாய்
காவியம் படைத்துவிடு
கண்ணியம் பல பெற்றிடுவாய்
வீட்டுச் சந்தோசத்தின்
துருவங்களான உங்களின்
அணிசேர் ஐக்கியத்தில்
குதூகலந்தான் கிடைத்திடுமே...
4 comments:
சார் சூப்பர் அருமையா சொல்லிருக்கீங்க
வாவ்..அருமையான அறவுரை.அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள்.
சூப்பர்
ம்ம்..உண்மைதான்,,,
இதை பல மருமகள்கள் புரிந்து கொள்வதில்லை என்பதே வருத்தமான உண்மை..மாமியார் கொடுமைகள் எல்லாம் மலையேறிப்போய்..இப்போது விதிவிலக்காக ஒன்றிரண்டு...
Post a Comment