அன்பே உருவமாய் அடைந்தேன்
பாசமே உயிராய் தொடர்ந்தாய்
சுவாசமே நீயாய் சுவாசிக்கிறேன்
உலகமே நானாய் கொள்கிறாய்
மெய்மறந்த காதலை உணர்கிறேன்
அமுதமாய் என்றும் தித்திக்கிறாய்
வாழ்வின் வெற்றியாய் கொள்கிறேன்
மங்கிடா ஒளியாய் மிளிர்கிறாய்
மணவாழ்வின் வருடங்கள் கடந்தேன்
என்சிசுவாய் நீதான் இருக்கிறாய்
குறையொன்று என்னிடம் காண்கிறேன்
நிறைந்த கண்ணாளனாய் ஏந்துகிறாய்
மலரா மொட்டாய் இருக்கிறேன்
மலரே நீயென்று சூடுகிறாய்
வசைகள் பலகோடி கேட்கிறேன்
வாஞ்சையுடன் அணைத்துக்கொள்கிறாய்
உன்னுருவில் மழலை கேட்கிறேன்
உன்னோடு நானிருக்கிறேனென்கிறாய்
என்னுயிராய் நீதானிருப்பதால்
உன்னுயிரில் ஒருயிரைக் கேட்கிறேன்
தத்தெடுக்கும் மழலை வேண்டாம்
தலைகவிழும் நாணம் வேண்டாம்
மாற்றான் குழந்தைக்கு உரிமம் வேண்டாம்
மாயை உலகில் வம்புகளும் வேண்டாம்
வேண்டுமுன்னால் ஒர் குழந்தை
வேதனை தீர்க்கும் அக்குழந்தை
மனதாறப்பகிர்கிறேன் என்னிலையை
மடிப்பிச்சையும் கேட்கிறேன்.
(இன்னோர் தாயிடம்.....)
(இன்னோர் தாயிடம்.....)
5 comments:
//உன்னுருவில் மழலை கேட்கிறேன்
உன்னோடு நானிருக்கிறேனென்கிறாய்
என்னுயிராய் நீதானிருப்பதால்
உன்னுயிரில் ஒருயிரைக் கேட்கிறேன்//
நேசத்தின் வாசம் வீசும் வார்த்தைகள்..
@பாரத்... பாரதி...
மிக்க நன்றி தோழரே...
//உன்னுருவில் மழலை கேட்கிறேன்
உன்னோடு நானிருக்கிறேனென்கிறாய்
என்னுயிராய் நீதானிருப்பதால்
உன்னுயிரில் ஒருயிரைக் கேட்கிறேன் //
சொல்ல வார்த்தையே இல்லை சகோ.......
சூப்பர்!!!
அருமையான வரிகளை தேர்ந்தெடுத்து அழகாய் கவிதை மாலை தொடுத்துள்ளீர்கள்/
உங்கள் வரிகளின் ஏக்கத்திற்கு உரியவர்க்கு இன்னோர் தாயாக கடவுள் இருந்து அப்பெண்ணின் நிலையை மாற்றட்டும்....
வாழ்த்துகள்.... நண்பா...
Post a Comment