பசிக்குக் கையேந்திய
|
பச்சிளம் குழந்தைக்கு
|
இல்யென்று மனமும்
|
எப்படியப்பா சொல்கிறது
|
யாரோ விட்டதவறில்
|
வீதிக்கு வந்துவிட்ட
|
மனித(உன்)குலத்தின் அவலமிது
|
உன்கடமை மறந்துவிட்டாய்
|
ஏற்றத்தாழ்வு
|
இணைந்திருக்கும் வாழ்க்கையில்
|
ஏழை நிலை உணர
|
ஏனுள்ளம் நாடவில்லை
|
வாகனப் பவணியுன்
|
வருகையென்றும் நிலைத்திடுமா
|
வழியிலுள்ள ஓர்தடங்கல்
|
உன்நிலையும் மாற்றிடுமே...
|
நீயறியா கஞ்சத்தனமுன்
|
அகத்திரையினை மறைத்திருக்கு
|
கண்மூடும் வேளையிலே
|
கைசேதப் படுவாயே...
|
தயவுதேடுகின்ற ஓருயிரை
|
தத்தெடுத்தேனும் வழிசெய்திடு
|
தரணியில் பிறந்தபயன்
|
அடைந்தபலன்
கிடைத்துவிடும்
|
3 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இரத்தல் என்பதே கொடுமை. அதைவிட கொடுமை இரப்போர்க்கு இல்லை என சொல்வதும் அந்த வார்த்தையை அவர் கேட்கும் போதும்....
யாரும் ஆசைபட்டு வருவதில்லை. அவர்கலுக்கு பெரிய உதவியாய் செய்யாவிடினும் குறைந்தபட்சம் சிறுதொகையை கொடுத்து உதவலாம்.
//பசிக்குக் கையேந்திய
பச்சிளம் குழந்தைக்கு
இல்யென்று மனமும்
எப்படியப்பா சொல்கிறது
///
மனதை நெருடும் வரிகள்
வாழ்த்துக்கள் சகோ... தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் :)
/யாரோ விட்டதவறில்
வீதிக்கு வந்துவிட்ட ///
வலி தரும் வார்த்தைகள்...
ஒருபுறம்,
செல்லும் வழியில் ஒருவர் இருவர் என்றால் கொடுக்கலாம்... ஒருநாள் இருநாள் என்றால் கொடுக்கலாம்...தினமும் எத்தனை பேருக்கு கொடுக்க இயலும்... கடினம்தான்... உள்ளம் வருந்தினாலும் உதட்டில் சொல்லவேண்டிய நிலை...
மறுபுறம்,
உணவங்கள், கேளிக்கைகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவளிக்கும் நம்மால் அவர்களுக்கு சிறுதொகையை கொடுக்காமல் இருப்பது கொடுமைதான்...
இந்நிலை மாறட்டும் இறைவன் திருவருளால்...
Post a Comment