மனித நேயத்தின் முகவரி நீ
மரணித்தும் மனித மனங்களில்
வாழும் உத்தமன் நீ
நீ வாழ்ந்த காலமது
வறியவனும் மகிழ்ந்த காலம்
பகலிரவாய் பாரபட்சமின்றி
பல்லின மக்களையும்
உடன்பிறப்புக்களாய்க் கண்டு
உயிர்தவிர ஈந்தளித்தாய்
அக்காலத்து உள்ளங்களெல்லாம்
அதிகமதிகம் உனை யாசித்திருந்தது
உம் அசுர வேகத்தின் வெற்றிகளில்
உருக்குலைந்தன பல உள்ளங்கள்
ஏழைவிடுகளெல்லாம்
செல்வமயமாய் மாறியகாலம்
மாடிமுதல் குடிசைவரை
மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு தந்தாய்
உன் மறைவில் உருக்குலைந்தது
இலங்கையில் எம் தேசம்
இன்னுந்தான் பல உருவங்களாய்த்
தவிக்கிறது எம் சமுகம்
தசாப்தங்கள் கடந்தும்
வீதகளில் விட்ட அனாதைகளாய்
தட்டுத்தடுமாறித் தவிக்கிறது எம் இனம்
தலைவர்கள் கூட்டம் தத்தம் தயவுகளில்தான்
தாங்கிச் செல்கிறார்கள் நாளைக்காய்
ஒன்றுபடுத்திய அஷ்ரஃப்
வென்று காட்டிய அஷ்ரஃப்
பாதை வகுத்த அஷ்ரஃப்
தாணைத் தளபதி அஷ்ரஃப்
சுவனத்திலல்லவா வாழ்கிறார்
மீண்டுமொரு அஷ்ரஃப்
மீளப்பிறந்திடுவாரா??
மீதமுள்ள எம் தேசத்தை
மீளவும் ஒன்றுபடுத்திட
மீண்டு வருவாரா??
0 comments:
Post a Comment