உறையும் குளிரில்
உள்ளமும் நடுநடுங்குகிறது
உறவுகளின் உணவுகளுக்கு
உயிரும் இங்கு பிரிகிறது
தேசமிது பாலைவனந்தான்
பணத்தின் சோலைவனமானதில்
அதிஉச்ச சூடும் அதிரும் குளிருமாய்
அவதிகளால் அல்லலுமதிகம்
முப்பது வயதானவருக்கு
மூச்சு முட்டியதால் - இவ்
உலகவாழ்வை முடித்துக்கொண்டாராம்
கேட்டதில் மூச்சே இறுகிப்போனது....
அச்சம் எதிர்காலத்திலாக்கி
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால்
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது.
2 comments:
வணக்கம்
மனதை கனக்க வைத்த வரிகள்.. அதுவும் உண்மையான வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வேதனைதான் சகோ..
Post a Comment