நேற்று வெள்ளிக்கிழமை (16/01/2015) குளிர்காலக் கிண்ணம் என்ற தலைப்பில் 10 அணிகள் கொண்ட 11போர் 7 ஓவர்கள் அடங்கலாக நடாத்தப்பட்ட கடின பந்து (MRF) சுற்றுப்போட்டியில் எங்களது (CEYLON STARS CRICKET CLUB) அணி சம்பியனாக தெரிவானதில் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.
எனது தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆட்ட வீரர்களாக அட்டாளைச்சேனை சியாத் மற்றம் ஹிஸ்வான். பாலமுனையைச் சேர்ந்த றிஸ்மி,,மியாத்,பாயிஸ்,நஜீப்,றிபாய்.அக்மல்.நளீம்,றிபான், யாழ்பாணம் உசந்த வாழைச்சேனை றியாஸ் திருக்கோவில் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்
துடுப்பாட்டத்தில் றிஸ்மி மிகவும் சிறப்பாக தனது திறமையை ஒரு அரைச்சதம் அடங்கலாக வெளிக்காட்டியிருந்தார் அத்துடன் சியாத் மியாத் றிபாய் மற்றும் ஏனையோரும் சிறப்புற தங்களது பங்களிப்பினைச்செய்தார்கள் அனைவருக்கும் எனது மிக்க நன்றிகள்
பந்து வீச்சைப்பொறுத்தவரை மியாத் உசந்த மற்றும் அக்மல் சிறப்பாக தங்களது பங்களிப்பினைச்செய்து வெற்றிக்கு வகை செய்தனர் அதிலும் குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஒரு ஓவரில் தொடர் நான்கு பந்துகளில் 4 விக்ட்டுக்களை வீழ்திய அக்மல் (மலிங்க விக்கட்) எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தினார் அவர்களுடன் றியாஸ் மற்றும் றிபாய் அவர்களும் பந்து வீச்சில் கலந்து கொண்டார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
களத்தடுப்பில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது அனைவருக்கும் ஒவ்வொருத்தராக விசேசமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் அத்தோடு பார்வையாளராக பாலமுனை மக்கீன் ஜலீல் அவர்கள் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தினார் அவருக்கும் மிக்க நன்றிகள்
இச்சந்தர்ப்பத்தில் விடுமுறையில் இருக்கின்ற சகோதரர் றிசாத் அவர்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர் எங்களது அணியின் ஆரம்ப காலத்திலிருந்து சிறப்புற நடைமுறைப்படுத்தி வந்திருந்த றிசாத் இச்சந்தர்ப்பத்தில் இல்லாதது அனைவருக்கும் வருத்தத்தினைத் தந்திருந்தது அவருக்கும் பிரத்தியேகமான நன்றிகளையும் இந்தக் கேடயத்தினை அவருக்கே சமர்ப்பணமும் செய்கிறோம்
இந்த சுற்றுப்போட்டியில் கேடயமும் பணப்பரிசில்களும் வளங்கி சிறப்பாக நடாத்தி முடித்த சகோதர்களுக்கும் மிகவும் பலம்வாய்ந்திருந்த கல்முனையை மையமாக கொண்ட எதிரணியினருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றிகள் நன்றிகள்
பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய இந்த வெற்றியானது காலாகாலம் மகிழக்கூடிய ஒரு விடயம் ஆதலால் எனது தளத்தில் உள்வாங்கினேன். பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாகியிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
1 comments:
வணக்கம்
விரிவான தகவல்....பகிர்வுக்கு நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment