கல்யாணச் சந்தையில்
செக்கு மாடுகளாய் மாப்பிள்ளைகள்
ஹறாம் ஹலால் தெரிந்திருந்தும்
ஹாறாத்திலான திருமணங்கள்
மார்க்கம் கற்றிருந்தும்
பணம் வசதி கையிலிருந்தும்
சீதன மூட்டைகளை - எம்
மாப்பிள்ளைக் கழுதைகள் சுமக்கிறார்கள்
என் சமுகத்து வாலிபனே....
இறைவன் படைத்த அழகிய உருவம் நீ
அவனே படைத்த பரந்த உலகில்
உனக்கென வீடமைத்து
பெண்ணுக்கு விலை கொடுத்து
வீரியப் புருசனாய் வாழவேண்டாமா நீ.....
பல லட்சம் கையில் வாங்கி
சில ஆயிரம் பிச்சையிட்டு
அடிமைச் சாசனம் ஊர் கூட்டியெழுதி
அடகு வைக்கிறாயே உன் ஆண்மையை
ஆணாய்ப் பிறந்ததால் அவமானமில்லையா உனக்கு...
இறைவன் வகுத்தளித்த பாதை மறந்து
உலக ஆசையில் உன்னை மறந்து வாழ்கிறாய்
திருமணம் பேசுமுன் சீதனத்தை தேடுகிறாய்
அத்தனையும் அற்பமென்றுணரந்து
அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்....
2 comments:
nice thoughts
to be reached everyone
அர்த்தமுள்ள அழகு கவிதை
Post a Comment