சிறுவர்களின் உலகில்
சிறகடிக்கும் சிறார்களை
சுட்டிக் குட்டிகளாய் கண்டு
மகிழ்வின் உச்சத்திற்குச் செல்கிறோம்
வார்த்தைகளால் கட்டிவைத்து
சுதந்திரத்தினை பறித்துவிட்டு
மனஅழுத்தம் கொடுத்து விட்டு
மகனே/மகளே நீ மந்தம் என்கின்றோம்
விட்டுவிட்டோம் அவர்கள் போக்கில்
வினவுதலில்லை எதனைப் பற்றியும்
வினையொன்று கண்டவுடன்
விழிக்கின்றோம் வழிகளற்று
இன்றய காலத்தில்
வேடதாரிகள் காவலர் வேசங்களில்
கண்டிப்புடன் விபரிக்கணும்
கவனமாக நடந்து கொள்ள
அங்காங்கு துஷ்பிரயோகங்கள்
சிறார்களைக் குறிவைத்தே
நடாத்துகிறார்கள் - காரணம்
சிறுவர்கள் என்பதால்தான்
எம் கண்களான சிறார்களைக் காத்திட
பெற்றோர்களே கவனமெடுத்திடணும்
குழந்தையினைச் சுற்றி
பாதுகாப்பு வட்டமொன்றாக்கிடணும்
அன்பினால் அரவணைத்து
பாசத்தினால் பக்குவங்கள் தந்து
நல் வழி காட்டி நின்று
எம் சிறார்களை வளர்த்திடணும்
அறியாப் பருவமவர்களது...
அறிவிலிகளை அடையாளங்காட்டி
வாழ்க்கைப் பாடத்தினைப் புகட்டுங்கள்
உங்கள் விதை ஆல விரூட்சமாகும்
2 comments:
அருமை அருமை
மிகவும் இரசித்தேன்
வாழ்த்துக்களுடன்...
அருமை சகோ
Post a Comment