தோல்வி கண்டு துவண்டிடாதே
வெற்றி நோக்கி வெருண்டு எழு
எதனால் தோல்வியென்று கண்டு
துடைத்தெறிந்திடு வெற்றிக்காய்
தோல்வியால் அச்சங்கொண்டு
வெற்றியைத் தூரமாக்கி
தோல்விக்கே இன்னும் உரமூட்டி
தோற்றிடாதே உன் வாழ்வில்
சுற்றார் கூற்றில் சுறுண்டு
சுவர்களுக்குள் சிக்குண்டு
சிதைத்திடாதே உன்னை
சினங்கொண்டெளு -உன்
சீற்றம் வெற்றிகளைத் தேடித்தரும்
உற்றார் உனக்கு ஊட்டிடும்
உண்மையான உரைகளை ஏற்று
சுற்றும் முற்றும் உற்றுப்பார்
உன்னருகில் காண்பாய் வெற்றிகளை
எத்தனை முறை வீழ்ந்திருப்பாய்
உன் தத்திமித்தும் பருவத்தில்
எழுந்திராவிட்டால் நடந்திருப்பீரா இன்று
உனைத் தூக்கிவிட நாங்களுண்டு
எழுந்துநட வெற்றி நோக்கி
வயதுகள் உனைக் கடந்து செல்லும்
விடுபட்டவைகள் மீண்டும் திரும்பிடாது
நாளைய வயது உன் தவறுணர்த்துமுன்
இன்றய வயதின் தேவைகளை அகற்றிடு....
தோற்றாயென்று தூற்றுவோருக்கு
வென்றாயென்று வெதும்பிட
வகுத்து நட உன்வழியில் - நாளை
என் வீரத்தாய் நீயாவாய்
2 comments:
உங்கள் கவிதையைப் படிக்கும் போது உட்சாகமாக உள்ளது
தோல்விகள் ஒவ்வொன்று வெற்றியின் ஆரம்பமே என்ற வாறு வாழ்ந்து காட்டு சிறு துன்பத்திலும் துவண்டு விடாதே எழுந்து நில் நிமிர்ந்து நில் வெற்றியை நோக்கிப்பயணி
இளயவர் யுவதியர் என அனைவருக்கும் பொருத்தமான இந்த கவிதை வரிகளை நான் லைக் பன்றேன் சூப்பர்
நன்றியுடன் நண்பன்
உற்சாக உரமூட்டும் கருத்துகள் அமைந்த தன்னம்பிக்கை தரும் பாடல்!
வாழ்த்துகள்!
Post a Comment