என் கண்ணடைத்து அழைத்துச்சென்றாய்
செல்லும் இடமெல்லாம் நானும் உன்பின்னே
அடைந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கிறேன்
யாருமற்ற அனாதரவாய் நான்
நீ மட்டும் உலகமென்று நடந்தேன்
சூழ இருந்தவைகள் அற்பமென்றுணர்ந்தேன்
அற்புதம் அத்தனையிலுமிருக்க
எதையும் நான் காதலிக்கவில்லை
உன் காதல் மட்டும் கட்டிவைத்திருந்தது
தித்திப்பும் அது காட்டிநின்றது
திகைத்திடும் இன்நாளையும்
திடமாய் எனக்கு உணர்த்திவிட்டது
பதட்டம் என்னை அர்ப்பரித்திருக்கிறது
வெடித்துவிடும்போல் மனம் வேதனைப் படுகிறது
உனைக் காதலித்த என் இதயம் - உன்
சொல்லம்புகளால் சுக்குநூறாகியிருக்கிறது
பெண்ணை மட்டும் காதலித்துப் பேதையானேன்
பார் துறக்கும் தருணத்தை நாடலானேன்
பாவை அவளுக்கும் இதயமொன்று இல்லையென
எனைப் பார்த்து அவளும் பரிகாசம் செய்கிறாளே
நாசமே எனக்கு இக் காதலால்தானே
காதலே என்னை மட்டுமேன் யாசகனாக்கினாய்
எனைத்துறந்து வாழத்துடிக்கும் அவளுக்காவது
ஜெயமொன்று கிடைத்திடட்டும் என் காதலால்
1 comments:
அட என்னாச்சு? காதலில் மோதலா? மோதலால் வரிகளா?
நீ மட்டும் உலகமென்று நடந்தேன் சூழ இருந்தவைகள் அற்பமென்றுணர்ந்தேன் அற்புதம் அத்தனையிலுமிருக்க எதையும் நான் காதலிக்கவில்லை
இதான் காரணமாய் இருக்கும், அத்தனையுமிருத்த அவள் மேல் மட்டும் காதல் வந்தால் கடைசியில் வேதனை தான் தஞ்சம்,
வரிகளில் வேதனை இழையோடுகின்றதே! அருமை ஹாசிம்,
Post a Comment