இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, March 20, 2016

ஹசன் அலி சேர் அவர்களே சற்று நில்லுங்கள்.....


பெருமதிப்புக்குரிய ஹசன் அலி சேர் அவர்களுக்கு 
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளாஹ்

நீங்கள் வளர்த்தெடுத்த பல்லாயிரம் போராளிகளின் சார்பாக அதன் அடிப்படை உரிமையுடன் சில விடயங்களை பரிமாறிக்கொள்ள நாடுகிறோம்.  
பாலமுனையில் இடம்பெற்ற மகாநாட்டில் உங்களைக் காணததையிட்டு பெரும் ஏமாற்றம் அடைந்தோம். அதையொட்டியதாக தலைவர் ஹக்கீம் அவர்களின் உரையின் சாடல்களில் ஒரு பெரும் ஊடல் உங்களுக்குள் இருப்பதாக உணர்ந்தோம். உங்களுக்குள் இருக்கின்ற மனக்கசப்புகள் பிரச்சினைகள் என்ன என்பதை நாங்கள் அறிந்திட வாய்ப்பில்லை அவைகளை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள் என்பது எங்களது முதல் விண்ணப்பம். 

எமது முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் இத்தனை காலம் இணைந்து செயல்பட்ட நீங்கள் மரணிப்பதும் அதனோடுதான் இருக்கவேண்டும் என்று ஆவல்கொள்கின்றோம் உங்களின் மரணத்தின் பின்னர் துரோகி என்ற பட்டம் சூட்டப்படாது  தியாகி என்று அழைத்திட நாடுகின்றோம். மறைந்த எம் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் வழியொட்டி தியாகத்தோடு செயல்பட்ட நீங்கள் பல வழிகளில் கௌரவிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை தாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இப்போது இருக்கின்ற சுயநலக் காரணங்களை முன்வைத்து விலகிச்செல்வீர்களானால் அது மிகப்பெரும் அழியாத தழும்பாக பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை. எமது கட்சியின் வரலாற்றில் எத்தனை துரோகிகளை அடையாளங்கண்டிருக்கும் நீங்கள் அவர்களின் வரிசையில் நீங்களும் சேர்நதிடாதீர்கள் என வினயமாக வேண்டிநிற்கிறோம்.  

எமது தாரக மந்திரம் ஒற்றுமை அதற்குப் பங்கம் உங்கள் வாயிலாகவும் ஏற்றபடுகிறதே என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை உங்களுக்குத் தெரியும் அடிப்படைப்போராளிகளாக எம் பிரதேசங்களில் வலம் வருகின்ற அனைவரும் அதே நிலையில் வாழ்நாளைக் கழிக்கிறார்கள் .கவனம் செலுத்தப்படாத அபிவிருத்திகளாலும் கரிசனை காட்டப்படாத தொழில் வாய்ப்புகளாலும் மாற்றமில்லாத வாழ்வாதார நிலைகளோடு தின்பது பாதி தின்னாதது மீதியென தியாகிகளாகவே மாற்றங்களில்லாத வாழ்வோடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தில் கட்சி விட்டு கட்சி மாறி சுயநலத்தை நோக்காகக்கொண்டவன் சுகமாக வாழ்கிறான் இன்று இல்லை நாளை எம் சமுகத்திற்கு விடிவுகிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் அத்தனையையும் குழிதோண்டிப் புதைப்பது போல் உங்களைப்போன்ற எங்களது தந்தையர்களின் செயலில் இவ்வாறான மாற்றங்களைக் காணும்போது மனம் வெடித்துவிடும்போல் பதறுகிறது. 

தசாப்பதங்களைக் கடந்த போதும் உங்களது நிலைகளின் நிலமைகளைப் புரிந்துகொண்டு அழுதங்களை உங்கள் மீது செலுத்தாது எங்களது வாழ்நிலைகளை சமாளித்து வாழ்கிறோம் உங்களால் முடியாமல் போனதன் சுயநலங்கள் என்ன?? 

தற்போதய நிலையில் எங்களுக்கு எழுகின்ற சந்தேகம் என்னவெனில் பாராளுமன்றத்தின்கான பதவிகள் மறுக்கப்பட்டபோது உங்களால் கட்சில் இருக்க முடியவில்லை அதற்காகத்தான் இத்தனை காலம் இந்த மு.காங்கிரஸை ஏமாற்றி சுகபோகங்களை அனுபவித்து வந்திருக்கிறீர்களோ என எண்ணத் தோன்றுகிறது இவ்வாறான சந்தேகங்களுக்கும் அவப்பெயர்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்திடுங்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையோடு கலந்தாலோசித்து காத்திரமான முன்னேற்றங்களை மக்களுக்கா மேற்கொள்ளுங்கள் அதன்பால் இறைவனிடத்திலும் உங்களக்கு உயரிய நிலை கிடைத்திடும் இறைவன் எம் அனைவரையும் ஒற்றுமையோடு வாழச்செய்திடுவானாக நன்றி வஸ்ஸலாம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...