ஆற்றாமை உன்னை ஆட்சிசெய்கிறது
ஆற்றலுள்ளவன் அடிமைப்படுத்துகிறான்
தேற்றவனாய்த் துவண்டு வீழ்கிறாய்
தோல்விகளோடெதற்குத் தொடர்கிறாய்
உன் துணிவிலும் பொறுமையிலும்
உச்சம் தொட்டவன் - எச்சமேனும்
உனக்காய் விட்டுவைக்கவில்லை
அச்சமின்றி விலகிடு வெல்வதற்காய்....
உன்னாலும் முடியுமென்று நம்பி
முனைந்து நீ முன்னேறிக் காட்டு
முழு உலகமும் உன் காலடியில்
உனக்காகவும் ஒருநாள் தவமிருக்கும்
கண்ணியத்தையுன் நேர்மையிலாக்கிடு
தற்பெருமையகற்றி தனக்கெனவழியமைத்திடு
கைகொடுத்தோருக்குக் கைகொடுத்துநடந்திடு உன்பாதையும் வெற்றிப் பாதையாகிடும்
0 comments:
Post a Comment