பொல்லாத வாழ்க்கையடா
போதுமிந்த வாழ்க்கை
வயது அறுபது கடந்துவிட
வயதுகள் நாற்பது தனிமரமாய்
இத்தனை காலத்தில்
இருபது தடவை உறவுகண்டு
இன்பங்கள் மூன்றரை வருடமட்டும்
இதுவும் வாழ்க்கை பொறுக்குதில்லை மனம்
உறவுகள் பல இருந்தும்
உடமைகள் கூட இருந்தும்
உலர்ந்த விழைநிலமாய்
உணர்வறுந்த வாழ்க்கை
மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்
வெளிநாடு என்ற மாய உலகம்
வெறுமனே உமை திசைதிருப்புகிறது தோழா
வெற்றி காண, இளைஞனே
வெகுளியாகிடாதே - உனை தொலைத்து
நல்ல கல்வி நீகற்று
நன்நெறியும் நீ பயின்று
நல்ல பதவி நீயடைய
நலம் பெறு நாட்டினிலே...
குறிப்பு : இதற்கு எதிர்மறையாக குடும்பங்களுடன் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வேறு அதனை ஒப்பீட்டளவில் விடவேண்டியுள்ளது
அதிகமானவர்களின் வாழ்க்கை வெளிநாட்டு வாழ்க்கையை நம்பி வாழ்க்கையை தொலைத்து புலம்பக்கேட்டிருக்கிறேன் அந்த கருவினால் உருவான வரிகள் இது எதிர்கால சந்ததிக்கான அறிவுரையாக இருக்கட்டுமே என்று பார்வை இடுபவர் தயவு செய்து கருத்திடுங்கள் மிக்க நன்றி
6 comments:
உங்கள் ஆதங்கம் நியாயமானது வெளி நாட்டு வாழ்வில் தொலைந்து போன்வைகள் பல. சிந்திகக் வேண்டியவைகள்.
@நிலாமதி
மிக்க நன்றி தங்களின் வருகையில்ஆனந்தம் மேலான கருத்துக்கு நன்றிகள்
அருமை
ஹாசிம்..ஏன் இவ்வளவு சோர்வு.இதே வார்த்தைகளைத் தைரியமாக்குங்கள் !
@சசிகுமார்
மிக்க நன்றி நண்பா
@ஹேமா
கண்டிப்பாக தோழி தைரியமான சந்தர்பங்களில் கட்டாயம்
சோகம்களைக்காணும் போது சோகமாகிறது வரிகள்
Post a Comment