இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, October 16, 2010

வீணான கண்காட்சி...

வாலிபம் கடந்தும் 
வாழத்துடிக்கும் வாலிபனுக்கு 
வாழ்க்கைத்துணை நாடி
வாறாங்க(வருகிறார்கள்) பெண்பார்க்க


மணாளனின் பட்டாளமாம் 
மடைதிறந்த வெள்ளமாய் 
மனிதர்கள் கூட்டமொன்று 
மனங்கோணும் விசாரிப்புகளுடன்



ஏதேதோ பேசிவிட்டு 
ஏலம் போடுகின்றனர் 
ஏதும் உரைக்காத ஊமையாய் 
ஏளனமாய் மாப்பிள்ளை 


அலங்கரித்த பெண்ணவளை 
அலங்காரப் பொருளாக்கி 
அத்தனை கண்களும் மேய்ந்து 
அளவளாவும் உரையில் வெந்து 


பேதையவளின் மனமும் கூச
பேறுகளற்ற கண்காட்சியில் 
பேதலித்த உள்ளத்துடன் 
பேதை மனமும் அழுகிறது 


கவலையற்ற உறவுகளோ 
கருத்துகளைக் கூட்டி எடுத்து 
களைந்து விடநாடி -  ஜாதகத்தில் 
கண்டமென விதியமைத்த அனியாயம் 


மனங்கள் பல அழுகிறதே 
மனிதம் அங்கு துன்புறுகிறதே - என்று
மறந்த மனிதன் ஒன்று - மீண்டும் 
மனங்களை கொல்ல தேடுகிறான் 




குறிப்பு : இடத்திற்கு இடம் சம்பிரதாயங்கள் வேறுபடலாம் ஆனால் நோக்கம் ஒன்றாக அமைந்து விடுகின்றது திருமணத்திற்கு தகுதியான ஆண் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்கள் திருமண பந்தத்தை நிறைவேற்றுவதற்கு படும் அல்லல் நாம் அனைவரும் அறிந்த விடயம்தான் 
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது ஒரு பெண்பார்க்கும் படலம் ஆரம்பிக்கு முன்னர் அந்த பந்தத்தில் இணையும் இரு மனங்களும் சந்தித்து உறுதி அடைந்த பின்னர் சம்பிரதாயத்திற்காக பெண்பார்க்கும் விடயத்தை ஏற்பாடு செய்து விடுவது எவரையும் பாதிக்காத ஒரு விடயமாக அமையும் மாறாக பெண்பார்க சென்று விட்டு அதில் தீர்வு காணமால் வெறுமனே வேண்டாத காரணங்கள் கூறி அந்த திருமணத்தை அலைத்துவிடுவதில் அதிகமாக பாதிக்கப்படுவது ஒரு பெண்ணின் மனம் என்பதை திருமணத்திற்கு தயாராயிருக்கும் அத்தனை ஆண்களும் உணர வேண்டும் 
எத்தனை தடவை ஒரு பெண்ணை அலங்காரம் செய்து காட்சிப்படுத்தி அந்தப்பெண்ணின் மனதில் ஆசைகளை வளர்த்து அத்தனை ஆசைகளையும் உயிரற்றதாக்கும் செயல்களை களைவதில் அர்த்தம் உள்ளதாக அமையு்ம் என்பது எனது கரு இதனை ஒருவரேனும் உணர்ந்திட்டால் என் எண்ணம் ஈடேறிதாகிடும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

மதுரை சரவணன் said...

//அலங்கரித்த பெண்ணவளை
அலங்காரப் பொருளாக்கி
அத்தனை கண்களும் மேய்ந்து
அளவளாவும் உரையில் வெந்து // super.

சிந்தையின் சிதறல்கள் said...

@மதுரை சரவணன்


மிக்க நன்றி தோழரே..

Aathira mullai said...

இரத்தக் கவிதை இது ஹாசிம். படிக்கும் போதே மனம் மாறத்தூண்டும் கவிதை. இதயம் உள்ளவர்கள் எல்லாரும் சிந்தித்து மறக்க வேண்டிய ஒன்று இந்த பெண்பார்க்கும் படலம். அழகாகப் பெண்ணின் வலியை கவி வரியாக்கிய ஹாசிமுக்கு என் இத்யங்கனிந்த பாராட்டுக்கள்.. பெண்ணினத்தின் சார்பில் தங்களுகு மீண்டும் நன்றி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

பெண்ணின் வலியை கவி வரியில் சொல்லி விட்டீர்கள.. பாராட்டுக்கள் நண்பா.....

Cineikons said...

சினிமா கேலரி · Latest Tamil Video · வீடியோ · Tamil Cinema News Functions, kollywood gossips.sun tv serials,Tamil tv serials online, Tamil tv Shows online கோலிவுட் கிசுகிசு சினிமா செய்திகள்,Tamil Songs தமிழ் MP3 பாடல்கள் · தமிழ் வானொலி · MP3 பாடல்கள்

http://www.cineikons.com

http://cineikons.com

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...