ஓர் தாய் வயிற்றில் பிறந்த நாம்
உலகத்தாய் மடியில் தவழ்கிறோம்
எம் தாய்களின் மகிழ்வில்தான்
உலகமிது சாந்திபெறும்
பெண்கள் எம் கண்களென
பெயரளவில் மொழிந்து விட்டு
பெற்றவளையும் வதைத்திடும்
பேய்கள் வாழும் உலகமிது
படைப்பால் மென்மையானவளை
மகிழும் மலர்களாய் ஏந்திடாது
வெறுத்தொதுக்கி வேரோடழித்திடும்
வக்கிரப் புத்தியாளர்களின் உலகமிது
ஆதியும் அந்தமும் அன்னைகளிடமே
ஆணவமும் அசிங்கங்களும் களைந்து
ஆதரவும் பெண்களாலடைந்து
ஆறறிவாளர்களாய் மாறிட வேண்டும்
உணரும் உள்ளங்களாய் மாறி
மகளீரை மட்டும் மகிழச்செய்து
வாழ்வளித்து வாழ்வார்களானால்
வாழும் இவ்வுலகம் வசந்தமாகிடும்
2 comments:
அருமையான கவிதை! உள்ளத்தின் வெளிப்பாட்டை ஏற்ற நேரம் எழுத்தாக்கியமைக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்கு நன்றிகளும்!
@நிஷா
மிக்க நன்றி அக்கா
Post a Comment