என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....
அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு
முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்
இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்
மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்
காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது
மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்
உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...
உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை
உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது
அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
0 comments:
Post a Comment