அடுத்தவன் பணமென்றும்
அல்லலுடையவன் பணமென்றும்
அசிங்கமான முறைஎன்றும்
அறிந்திருந்தும் பெறுகிறாய்
செல்வம் சேர்க்கும் ஆசையில்
செளிப்பற்ற வழிதேடி
செம்மொழிகள் மறந்து
செல்லாக்காசாகிறாய்
ஆசைக்கு அடிபணிந்து
ஆற்றாமையில் பெறுகிறாய்
ஆற்றல்களை முடக்கி
ஆதரவு தர மறுக்கிறாய்
லஞ்சம் என்றுரைக்கும்
லட்சணமில்லா இப்பணத்தால்
லட்சியங்கள் இழந்து
லயித்துக்கிடப்பதேனோ..
கூடாத முறைதனில்
கூட்டியள்ளும் பணங்களால்
குடும்பத்தில் நிகளும்
குறை ஒன்றால் அழிந்திடுவாய்
படித்தவன் நீ என்று
பாமரன் உனை நாட
பக்குவம் மறந்து நீயும்
பரிதவிக்க ஏன் விடுகிறாய்
நீர் கற்ற கல்விக்கும்
நீர் பெற்ற தொழிலுக்கும்
நீர் பெறும் ஊதியத்தில்
நிம்மதி காண வேண்டாமா?
12 comments:
Google Online jobs will give the best income through your blog
பாராட்டுக்கள் ...
மிக்க நன்றி தோழர்களே ஊக்கம் தரும் உங்கள் கரங்களும் ஓங்கட்டும்
படித்தவன் நீ என்று
பாமரன் உனை நாட
பக்குவம் மறந்து நீயும்
பரிதவிக்க ஏன் விடுகிறாய்
//கூடாத முறைதனில்
கூட்டியள்ளும் பணங்களால்
குடும்பத்தில் நிகளும்
குறை ஒன்றால் அழிந்திடுவாய்//
அருமை. வாழ்த்துக்கள். லஞ்சம் ஒழிக்க பாடுபடுவோம்.
மிக்க நன்றி ஜோதி தங்கள் வருகையில் ஆனந்தம்
நன்றி சரவணன் கண்டிப்பாக ஒவ்வொருத்தரும் நாடினால் நிச்சயம் முடியாத காரியம் எதுவுமில்லை தோழரே..
//நீர் கற்ற கல்விக்கும்
நீர் பெற்ற தொழிலுக்கும்
நீர் பெறும் ஊதியத்தில்
நிம்மதி காண வேண்டாமா?//
மனிதா!
கல்வி கற்கவும்...
தொழில் பெறவும்...
என்னை(லஞ்சம்) கொடுத்து தான்
அவனே பெறுகின்றான்...
அப்படியிருக்க பெறும்
ஊதியத்தில் நிம்மதி
எப்படிகிட்டும் இவ்வுலகில்?
நெஞ்சத்தை கொல்லும் வஞ்சககாரன்... லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவோம்...
வாழ்த்துகள் தோழா...
நல்ல கருத்துள்ள கவிதை
சிந்தித்து உணர்வார்களா?
ஹாசீம்.
தங்களின் இடுகையை நிறைய பேர் பார்க்க தமிழிஸில் இணையுங்கள். ஓட்டுப்பட்டையை இதில் சேருங்கள்.
இது என்கருத்து. தங்களுக்கும் விருப்பமிருந்தால்..
தமிழ்மணத்தில் ஓட்டும் போட்டாச்சி
மிக்க நன்றி வாசன் என்னை தொடந்து தங்கள் வரிகளில் மேலும் மெருகூட்டிச்சென்றீர்கள்
நன்றி நண்பா
தமிழிஷில் இணைந்திருக்கிறேன் சகோதரி அதிகமான நண்பர்கள் பார்க்கிறார்க vote bar இணைப்பு பற்றி தெரிந்தவர்கள் குறிப்பிடுங்கள்
சகோதரி தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
Post a Comment