சுழலுகின்ற இப்பூமியில்
சுகங்கள் தேடி
சுற்றுகின்ற மனிதா..
உன்னில் திருப்தியுடன்
உறவுகள் பேணிவிட்டால்
உலக வீட்டினில்
உத்தம சுகம் தானடா
வளரந்த மகனாய்
வளர்த்து விட்ட பெற்றோரை
வளர்த்தெடுக்கும் குழந்தைகளாய்
வழுவாது நோக்குவதும் சுகமடா
கட்டிய துணையின்
கண்ணீர் துடைத்தெறிந்து
கண்களாய் நோக்குவதும்
கற்றறிந்த சுகமடா
பெற்ற குழந்தைக்கு
பெருவாழ்வு உகந்தழித்து
பெற்ற கடன் தீர்த்து விடு
பெற்றிடுவாய் சுகமதிகம்
தேடி விட்ட செல்வத்தை
தேவை தீர்ப்பதுடன்
தேடலுடையோருக்கு வழங்கிடு
தேடும் நிம்மதி கண்டுடுவாய்
உன்னைச்சுற்றி சுகமிருக்க
உலகெல்லாம் சுகம்தேடி
உவப்பற்ற உழைச்சலை
உடலுக்குத்தருவதேன்...
2 comments:
//உன்னைச்சுற்றி சுகமிருக்க
உலகெல்லாம் சுகம்தேடி
உவப்பற்ற உழைச்சலை
உடலுக்குத்தருவதேன்...//
கவிதை அருமை நண்பா.
நன்றி நண்பா
Post a Comment