அழகான வாழ்வு
அகிலம் கண்டும்
ஆனந்தம் கொண்டு
மனிதப்பிறவியாய்
மண்ணில் ஆர்ப்பரித்து
மனிதனாய் வாழ
மறுக்கின்ற உலகம்
செய்த பிழை எதுவென்று
சொல்லாது தளம்பறித்து
சிசுவாய் இருந்தாலும்
சிதைத்து சுகம் கண்டு
ஓடு மட்டும் துரத்தி
ஓட்டாண்டியாக்கி
ஒய்யாரமாய் படம் போட்டு
ஒப்பாரியில் வாழ்கிறார்கள்
எல்லார் வாழ்விலும்
எட்டப்பர்களாய்
எட்டி உதைத்து
எரித்துப் போட்ட சுதந்திரம்
அங்குமிங்குமாய்
அலைமோதும் அகதியாய்
அல்லல் படுத்தும்
அறிவு கெட்ட உலகம்
சுதந்திரம் என்ற சுவாசம்
அடைந்து பெற்றவர்களும்
அதனை அளிக்க மறுத்த
ஆட்சியாளர்களாய்....
மரத்துப்போன வாழ்வுடன்
மடிந்தொழிந்து போகுமுன்
மனிதன் என்றாவது
மறதியிலாவது நினைப்பார்களா?
இருக்குமட்டும் இருந்து
இறுதி மூச்சு வரை
சுதந்திரமாய் மூச்சுவிட
சுதந்திரம்தான் தருவார்களா?
ஈகரைத்தளத்தின் போட்டிக்காக எழுதிய கவிதை
0 comments:
Post a Comment