தா என்று எடுத்துச்சென்ற சேயை
தாலாட்டுகிறாள் வலி உணராத்தாய்
தாங்க மாட்டாமல் தவிக்கிறது உள்ளம்
வறுமை வயிற்றில் அடிக்க
வறிய புத்தியின் சொல் கேட்டு
வகுத்த நிபந்தனையில்
வலியோடு விழி தத்தளிக்கிறது
பத்து மாதங்கள் பத்திரமாய்காத்து
பஞ்சணை தர மறுத்து
பரிதாபமாய் பாலகனை
பறித்துச்செல்கின்ற வாழ்விது
தாயாய் இருந்தும் இல்லாத
தாய்மை உரிமையினை
தானாக இழந்து தவிக்கும்
தாரமற்ற வாடகைத்தாய்
நான் பெற்ற செல்வம்
நான் மறுத்த தாய் உரிமையுடன்
நான் இழந்த சேய்ப்பாசத்திற்கு
நானே பொறுப்பாளி
கொடுமையிலும் கொடுமையிது
கொதிக்கின்ற உணர்விது
பஞ்சத்தில் மடிந்திடினும்
பாவம் இச்செயல் வேண்டாமே...
0 comments:
Post a Comment