தங்கம் என்று தாவி அணைத்து
அங்கம் சிலிர்த்திட்ட பாசம் கலந்து
உதிரத்தினை அமுதமாக்கி
உச்சி மோர்ந்து ஊட்டுகிறாள் அன்னை
எட்டி நடந்து காலூண்டி
தட்டுத்தடுமாறி தாவிப்பிடித்து
வீறு கொண்ட வேங்கையாய்
எழுந்திட்ட பெருமிதம் அன்னையால்
“அ” என்று சொல்லமைத்து
அறிவென்ற கடலடைந்து
வெற்றிகளும் பல கண்டு
சாதனைகளும் அன்னையால்
தாரம் ஒன்று தேர்ந்தெடுத்து
தளரா வாழ்வும் உகந்தளித்து
சந்தோசம் வாழ்வாகிட
மாற்றியவளும் அன்னையே...
அத்தனையும் அவள் நிமித்தம்
கண்டுவிட்டு களைத்ததினால்
சேர்த்து விட்டாய் அன்னையில்லம்
சோர்ந்து மனம் வேகலியோ....
கடந்து விட்ட பாதையினை
வெந்து அவளும் தனித்திருக்க
நொந்து அவள் கதை கேட்டு
கண்ணீரும் கண்ணை மறைக்குதடா..
இணைய நண்பர்கள் வாசகர்கள்
உறவுகள் அத்தனைபேருக்கும்
என்னினிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அனைவரின் வாழ்விலும் சூபீட்சம் நிறைந்திட வேண்டுகிறேன்
2 comments:
பாராடுக்கள் அன்னையை முதியோர் இல்லத்தில் விடும் பாவிகளுக்கு, இது ஒரு பாடமாக் இருக்கட்டும்.
அன்னையை முதியோர் இல்லத்தில் விடும் பாவிகளுக்கு, இது ஒரு பாடமாக் இருக்கட்டும்
ம் அப்படியே
Post a Comment