அம்மா என்றழும் எனை
ஆரத்தழுவி அணைத்து
உச்சி மோர்ந்து பாசத்துடன்
பாலூட்டு அன்னையே..
அகமகிழும் உள்ளத்துடன்
பசிதீர்க்கும் உனை ஏந்தும்
பாலகனாய் வளர்ந்திடுவேன்
உன்பாசமே என்னுள்ளும்
உதிரமாய் ஓடிடுமே...
உன்னழகை காத்திடவே
என்னுணவை மறுத்துவிட்டு
புட்டிப்பாலும் நிரப்பி
ஆயாவிடம் பணி கேட்கிறாய்...
குணமற்ற வேலைக்காரியாய்
கடமைக்காய் உணவூட்டி
வெறுப்பிற்கு வித்திட
வளர்வேனா நல்லவனாய்...
என்தேவை நிறைவுக்கு
ஒருதாயும் அன்று கொடுத்தாய்
உன்தேவை நிறைவுக்கு
இன்று ஒரு தாய் பணித்துவிட்டேன்
அம்மா விதைத்தவள் நீயானாய்
அதை அறுத்தவன் நானாவேன்
என் குழந்தை வளர்ப்பிற்கு
நல்வழி நாடிவிட்டேன்....
3 comments:
கவிதை அருமை நண்பரே... சுகம் தானே?
@யாதவன்
மிக்க நன்றி தோழா நான் நலம்
அழகான் கவிதை நல்ல உள்ளங்களை தேடும் ஹாசிம் க்கு என் பாராடுக்கள்.
Post a Comment