வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை
தங்கம் என்ற குணமென்று
தாங்கினேனே என்நெஞ்சில்
என் காதலியாகவோ
எனைச்சேர்ந்த தாரமாகவோ
வென்றிடாத பாசத்தினுச்சத்தை
உறவுகளின் மேன்மையானவளாய்
அடைந்திருந்தாய்.....
மெய்மறந்த உலகில்
மிளிரும் ஒளிநிலவாய்
கண்டிருந்த காட்சிகளை
அமாவாசை இருள்நீத்ததுபோல்
சின்னாபின்னமானதே எம்முறவு
காண்போரின் காட்சிகளை
விவரித்த மொழிகளோடு
ஏற்றிடாத என்மனதும்
நம்பிக்கை கொண்டதற்கு
உன்நலிந்த செய்கைகளால்
நொறுங்கியதே என்னிதயம்
அறிவும் ஏற்றிடாத
அகமும் அழுதிருந்த
உறவு முறிவுதனை
இணைக்கின்ற நிலைவருமா?
மனிதன் என்றாகி
தவறும் உரித்தாகி
மன்னிப்பின் மலர்ச்சியில்
மலர்ந்திடும் நேயங்கள்
எத்தேசமிருந்தாலும்
நலங்காக்க இறைவனையும்
தவறைத் தொடர்ந்திடாது
திருந்திவாழ உனையும்
வேண்டுகிறது என்மனம்
5 comments:
நல்லா இருக்குங்க..
அட அட அட
அப்படின்னு சொல்ல வைக்கும் கவிதை
சூப்பர்
@அரசன்
மிக்க நன்றி சகோதரா....
@ஆமினா
மிக்க நன்றி சகோதரி மிகவும் ஊக்கந்தரும் தங்களின் வரிகளில் மெய்ச்சிலிர்க்கிறது
"வேசமற்ற பாசமொன்றை விதைத்து
என் தாயற்ற தாயனவளேயுனை
தங்கம் என்ற குணமென்று
தாங்கினேனே என்நெஞ்சில் "
அருமை மனதை தொட்ட வரிகள்..
Post a Comment