தேவை என்றறிந்தேன்
மருத்துவம் உன்னில் கண்டேன்
உன் வாசத்தில் நலங்கொண்டேன்
பாவித்ததால் தூக்கியெறிந்தேன்
சமையலோடு உடனிருந்தாய்
பரிமாறும்போது சேர்ந்திருந்தாய்
உண்ணும் போது ஒதுக்கிவிட
மனமேன்தான் கோணுவதில்லை
கறிவேப்பிலை நீயானதினால்
கவனமின்றி மனிதங்கள்
உன்போன்று ஒரு மனிதமானதினால்
உளம்நொந்து வேகிறானே...
அவனாலும் ஆக்கப்பட்டு
அவன் துணையில் வென்றுநின்று
இவன்தயவு வேண்டாமென
கிள்ளியெறிதல் தவறன்றோ..
அவன்செய்த உதவிகளை
உளமாற நினைத்துவிட்டால்
மனிதன் அவனிழைத்த
குறையேதும் தெரிந்திடாது
உயிரற்ற கறிவேப்பிலைபோல்
உயிருள்ள மனங்களையும்
களைந்தெறிந்த சாதனைகளை
சரித்திரங்கள் குறைசொல்லுமே....
2 comments:
மனிதம் இன்று நம்மில்.... கறிவேப்பிலையாய் சில இடங்களில்... திண்றபின் வீசியெறியும் எச்சில் இலைகளாய் சில இடங்களில்....
மனிதம் வளர்க்க பாடுபடுவோம்.... வாழ்த்துகள் ஹாசிம்...
கறிவேப்பிலையப்பற்றி இவ்வளவு அழகான கவிதை வடித்து விழிவிரிய வைத்துவிட்டீர்கள்.பாராட்டுகள்.
Post a Comment