சின்னஞ்சிறுசுகளாய்
சிதறித்திரிந்த சிட்டுகளாய்
கவலைகளறிந்திராத
வேளைகளோடு பயணித்தோம்
தந்தை உழைத்திருக்க
தாயும் அரவணைக்க
சகோதரப் பாசங்களுடன்
சந்தோசமே காலங்கள்
பள்ளித்தோழரென்றும்
பண்பான உறவுகளென்றும்
பாசங்கலந்திருந்த
பாதைச் சரசங்கள்...
பங்கம் விளைந்ததென்று
சொந்தம் காத்திட
சுவர்க்கம் இருக்கிறதென்று
சுகமறுந்த தேடலின்று
நாடு துறந்திருந்து
தேசம் கடந்த சேதங்களாய்
நாளும்பொழுதும்
தவிப்பே தாரமாகிறது...
தனிமை துணையென்று
காண்பவை தயவென்று
உண்பது உயிர்வாழ
உழைப்பே குறியாகிறது
சகிப்பை வேதமாக்கி
எதிர்ப்புகளின் உச்சத்தில்
எல்லையில்லா இன்னல்களுடன்
ஏக்கங்களின் ஆழுமையிங்கு
வாழமுடியாத வாழ்கையொன்றை
வாழத்துடிக்கின்ற உயிர்களாய்
இறைக்கையுடைந்து உலவுகின்ற
பறவைகளாய் நாங்களும் இங்கு.......
2 comments:
"இறைக்கையுடைந்து உலவுகின்ற"
"சிறகுடைந்து உலவுகின்ற"
சிறகுகள் என்று மாற்றினால் நன்கிருக்கும் என்று தோன்றியது நண்பரே
கவிதை அருமை .........
உணர்வுகளின் உச்சத்தில் கசிந்திருக்கிறது இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் அருமை . பகிர்வுக்கு நன்றி
Post a Comment