வெள்ளை நிறமென்று
வெற்று மனமென்று
வெல்லம் நீ தந்து
வென்றாய் நீ நின்று
பூவான மனமொன்றை
பூரிப்பும் உண்டாக்கி
பூக்கவும் நீ செய்து
பூவாக ஏந்தி நின்றாய்
காதல் மலரென்று
கனிவாய்தான் மலர
கற்கண்டாய் தினமும்
இனித்தது நன்று
கார் சூழல் தான் மிளிர
கருமை உணர்வுகளுடன்
கதகதப்பில் கவிழ்ந்து
கறுப்பு நிறமற்ற கருமையாகினாய்
வெள்ளை என்று மட்டும்
வெகுநாளாய்த் தொடர்நததில்
கறுப்பு மலரொன்றை
கண்ணியமாய் சூடிச்சென்றாய்.
8 comments:
கவிதை அருமை..
nalla kavithai friend
மிக்க நன்றி மல்லிகா மற்றும் சசிகுமார்
//வெள்ளை என்று மட்டும்
வெகுநாளாய்த் தொடர்நததில்
கறுப்பு மலரொன்றை
கண்ணியமாய் சூடிச்சென்றாய்.//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோதரா தட்டிக்கொடுக்கும் தங்களின் நல்ல உள்ளத்தை மெச்ச வரிகளில்லை
அருமை.. மோனைகளின் அட்டகாசங்கள்...
மிக்க நன்றி வழிப்போக்கன்
Post a Comment