அருகில் இருக்கிறாய்
அன்பைத்தருகிறாய்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்
நொடிப்பொழுதில்
அசர வைக்கிறாய்
அகம் வெல்கிறாய்
நொடிப்பொழுதில்
நொந்த விடயங்களையும்
மகிழ்வுறும் நிமிடங்களையும்
பரிமாறிடச்செய்கிறாய்
காதல் என்று கூறி
தொலைவில் இருந்து
தொக்கி நின்றவளை
கொக்கி போட வைக்கிறாய்
முத்தம் அவளுக்கென்று
நித்தம் நீ பெற்று
சத்தம் மட்டும் அவளுக்காக
சலனமின்றித் தருகிறாய்
அகிலம் சுருங்க
அதிகம் நெருங்க
தொல்லை தந்தாலும்
தொலைவை அறுக்கிறாய்
கையை விட்டுப்பிரியா
கைத்தெலைபேசியே உம்மை
கைக்கடிகாரத்தைவிட
அதிகம் காண்பதால்
பரவசம் அடைகிறது உள்ளம்
11 comments:
கவிதை மிக நல்லாயிருக்கு.....
//அசுரம் வெல்கிறாய்// இதன் அர்த்தம் என்ன?
nice
http://vaarththai.wordpress.com
மிக்க நன்றி தோழா கருணாகரன்
அசுரம் வெல்கிறாய் என்பது
அசுரம் என்பதே அனைத்தையும் வெல்லும் நிலை அதை விட வேகமாக இருக்கிறாய் என்பது பொருள்
super kavithai friend
தொலைப்பேசி அன்றாட செயல்களுக்கு ஒரு சாட்சியாய் நிற்பதோடு தொலைதூரத்தில் பிரிந்திருக்கும் உள்ளங்களுக்கு ஒரு ஆதரவாயும் செயல்படுகிறது என்கிற உங்கள் வித்தியாச சிந்தனை இதிலும் வெளிபடுவது கண்டு பிரமிக்கிறேன் ஹாசிம்...
எந்த ஒரு பொருள் பார்த்தாலும் அதற்கு ஒரு கவி புனையும் அற்புத ஆற்றல் இறைவன் உங்களுக்கு தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி தான் சொல்லவேண்டும்...
அருமையான கவிதைகள் படிக்க எங்களுக்கும் கிடைக்கிறதேப்பா...
அருமையான தென்றல் தவழும் வரிகளை போல் மெல்லிய அன்பை இதில் தவழவிட்டிருப்பதை காண்கிறேன்...
தொடருங்கள் ஹாசிம் உங்கள் ஆக்கங்களை.... இன்னும் உங்கள் எல்லா கவிதைகளும் படித்து நிதானமாக பின்னூட்டம் இடுவேன்பா...
ரிசார்ஜ் செஞ்சு கட்டுபடி ஆகமாட்டேங்குதே.. அருமையான கவிதை
மிக்க நன்றி தோழா சிதம்பரம் தங்களின் வருகையில் ஆனந்தம்
நன்றி சசிகுமார்
மஞ்சு அக்கா தங்களின் வரிகளில் மிகவும் சந்தோசம்
கண்டிப்பாக தங்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்
உங்களைப்போன்றோரால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய படைப்பாளி நான்
மிக்க நன்றி அக்கா
காதலர்கள் கூட பிரிந்தாலும்
கைப்பேசியை பிரிய முடியாமல்...
அருமையாக இருக்கு நண்பரே...
மிக்க நன்றி தோழா வாசன்
Post a Comment