குலம் காக்கும் பெண்ணொருத்தி
குறிப்பெழுத வழி செய்து
குற்றுயிராய் கிடக்கிறாள்
வேண்டாத மதுரசம்
வேண்டும் என்றே அருந்திவிட்டு
வேதம் மறந்த மாதுவாய்
வேகிறாள் மனம் நொந்து
அன்னிய கலாச்சாரத்தில்
அதிக ஆர்வாரத்துடன் நடக்கிறது
அமைதியாக அருந்திவிட்டு
ஆரவாரம் எம் குடியர்களால்
உழைப்பில் குறைவைத்து
ஊதியம் நழுவவிட்டு
குடும்ப நலம் நோக்காது
குடிப்பது மட்டும் தொழிலாக
காசுக்காய் எதுவும் செய்து
தன்னை உயிரோடு புதைப்பதுபோல்
தாலியையும் அடகுவைத்து
குடிப்பதில் மட்டும் சுகம்காண
தன்பிள்ளை எதிர்காலம்
தன்னலத்தில் கவலையில்லாது
தூவென்று ஊரார் தூற்ற
குடித்து விட்டு குப்புறக்கிடக்கிறாய்
போதையின் மயக்கத்தில்
போன இடம் தெரியாமல்
உன்னைத்துலைத்து உலகம்மறந்து
உருமாறுகிறாய் மனிதமில்லாமல்.
2 comments:
சூப்பர் நண்பா கலக்கல் கவிதை அருமை
மிக்க நன்றி தோழா...
Post a Comment