வருக...வருக....
றமழானே வருக..
மாதங்களின் சிறந்தவனே..
மாசுகள் தீர்ப்பவனே
றகுமத்தை அழிப்பவனே
பக்தியில் மிகுந்தவனே
நன்மைகள் நிறைந்தவனே
சுவர்க்த்தின் வழிகாட்டியே.
வருக றமழானே வருக.
பசிக்க வைத்து
ஏழையின் பசி அறிவித்தவனே
தாகிக்க வைத்து
நீரின் மேட்சி காட்டியவனே
ஈகைக்கு வழிவகுத்து
செல்வந்தர்களை சிறந்த
செல்வந்தனாக்கியவனே..
கடமைகள் ஓரிறைக்கென
உணரச்செய்தவனே..
வருக றமழானே வருக..
உன்வருகையால்
குதூகலம் முஃமீனுக்கு
சாட்டையடி செய்த்தானுக்கு
பூட்டப்பட்ட நரகம்
திறக்கப்பட்ட சுவர்கம்
ஆதலால் வருக
உன் வருகையில்
நலம்பெற வருக
உன் வரவு நல்வரவாகட்டும்
7 comments:
ரமழான் மாதம் சிறந்ததுதான் அனால் நீங்கள் சொல்லும்
(மாசுகள் தீர்ப்பவனே
றகுமத்தை அழிப்பவனே)விசயம் எல்லாம் இறைவன் தான் நமக்கு அழிக்கிறான் மாதம் அல்ல.
நன்றி
...
நன்றி தங்களின் வருகைக்கும் மேலான கருத்துக்கும்
இந்த மாதத்தில்தான் அதிகமான சிறப்புகள் இறைவன்தான் அனைத்தும் அழிக்கிறான் ஏனையமாதங்களைவிட அதிகமதிகம் றகுமத்தும் நன்மைகளும் கொட்டிக்கிடக்கும் மாதம் இம்மாதம்தான் அதனால்தான் அப்படிக்குறிப்பிட்டேன்
நன்றி நன்றி
காலத்துக்கேற்ற இடுகைதான் வாழ்த்துக்கள்..
நன்றி நண்பா தங்களின் கருத்தில் ஆனந்தம்
கவிதையும் லே அவுட்டும் நன்று.ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொஞ்சம் இருக்கு பாருங்க
மிக்க நன்றி சகோதரா..
தங்கள் வாழ்வில் எல்லா வளமும் வலமும் பெருகட்டும்... வாழ்த்துகள்
Post a Comment