காதலை மட்டும் ஆயுதமாக்கி
காணுகின்ற பெண்களையெல்லாம்
காமக் கழியாட்டத்திற்காக
காது குத்த நாடுகிறாய்...
மலர்விட்டு மலர் தாவும் வண்டாய்
மங்கையர் மனங்கவர்ந்து
மட்டற்ற மகிழ்ச்சியும் அதில் கண்டு
மதி கெட்ட வழியில் தொடர்கிறாய்
கன்னி அவளின்
கருணை உள்ளம் மயங்கிட
கதிரவனாய் காட்சிதந்து
கண்ணனாய் நீயும் மாறுகிறாய்
உன்தேவை தீருமட்டும்
உத்தமனாய் ஒப்புவித்து
உறிஞ்சி நீயும் அருந்திவிட்டு
உத்தரவு பெறுகிறாய்
உத்தமியான பெண்ணவளும்
உணராத திருவிழையாடலில்
உழைச்சலையும் தான்பெற்று
உயிரையும் விடுகிறாள்
எதுவும் அறியாப்பாலகனாய்
எட்டி நின்று முகம் நிறுத்தி
எங்கு இருக்கிறாள் இன்னொருவள்
என்றல்லவா தேடுகிறாய்
காமம் உன் கண்ணை மறைக்க
காதலுக்கு துரோகம் செய்து
காமுகனாய் வலம்வரும்
காடயனாம் நீ அல்லவா
4 comments:
ஹலோ என்னெங்க இதெல்லாம் அந்த காலமுங்க. இப்போ அது அப்படியே ரிப்பீட்டு
ஒரு சம்பவம் நடந்ததுங்க அதனால்தான் இப்படி எழுத நாடினேனுங்க மிக்க நன்றிங்க
மிகவும் சந்தோசமுங்க தங்களின் வருகையில்
காடையர்களுக்கு சவுக்கடி உங்கள் கவிதை !
நன்றி தங்களின் மேலான கருத்துக்கு
Post a Comment